Home
Tablets

OnePlus சம்மர் சேல்.. ரூ.3000 ரேட் கட்ல டேப்லெட்.. 9510mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. 12.1 இன்ச் டிஸ்பிளே!

ஒன்பிளஸ் சம்மர் சேலில் (OnePlus Summer Sale) பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமல்லாமல், ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ் மற்றும் டேப்லெட் மாடல்களுக்கும் 50 சதவீதம் வரையில் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் வெளியான ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மாடலுக்கு பட்டையை கிளப்பும் தள்ளுபடி வருகிறது. இந்த டேப்லெட்டின் பீச்சர்கள் எப்படி? மார்கெட் விலை மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் எவ்வளவு? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கின்றன. இங்கு வெளியானபோது, 8 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும், 12 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.42,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது, விலை குறைப்பில் கிடைக்கிறது.

OnePlus சம்மர் சேல்.. ரூ.3000 ரேட் கட்ல டேப்லெட்.. 9510mAh பேட்டரி!

ஆகவே, 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.35,999 பட்ஜெட்டிலும், 12 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.38,999 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.4000 விலை குறைப்பில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த விலையில், ஒன்பிளஸ் சம்மர் விற்பனையை முன்னிட்டு ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதேபோல 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது.

ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டை பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.32,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், மாணவர்களுக்கு பிரத்யேகமாக ரூ.1000 டிஸ்கவுண்ட் கூடுதலாக கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் பேட் 2 மாடலை ஒன்பிளஸ் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பீச்சர்கள் எப்படி?

ஒன்பிளஸ் பேட் 2 அம்சங்கள் (OnePlus Pad 2 Specifications): இந்த டேப்லெட் வை-பை மாடலாக இருந்தாலும், மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனுக்கு நிகரான அவுட்புட் கொடுக்கும்படி சிப்செட், கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஓஎஸ் கொண்டிருக்கிறது. ஆகவே, 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (4nm Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 (Oxygen OS 14) மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் லேக்-ப்ரீ அனுபவம் கொடுக்கும். 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமல்லாமல், 3K ரெசொலூஷன் கொண்ட 12.1 இன்ச் (3200 x 2120 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த பெரிய டிஸ்பிளேவில் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 303 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 540Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஓடிடி மற்றும் வீடியோ அனுபவத்தை பிரீமியமாக்கும்படி டால்பி விஷன் (Dolby Vision) வருகிறது. இதற்கு ஏற்றபடி 6 ஸ்பீக்கர்கள் மட்டுமல்லாமல், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சர்டிபிகேஷன் கிடைக்கிறது.

இந்த டேப்லெட்டில் 9510mAh பேட்டரி மற்றும் 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது. கேமராவை பார்க்கையில், எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. நிம்பூஸ் கிரே என்னும் ஒரே கலரில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Summer Sale OnePlus Pad 2 Gets Limited Time Offer Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X