இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
கிளவுட் 11 என்ற நிகழ்ச்சியை வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். இந்த நிகழ்ச்சியில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன், 65-இன்ச் ஸ்மார்ட் டிவி போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும். இதுதவிர ஒன்பிளஸ் பேட் எனும் டேப்லெட் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த ஒன்பிளஸ் பேட் ஆனது தரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த புதிய ஒன்பிளஸ் பேட் மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த ஒன்பிளஸ் பேட் ஆனது பச்சை நிறத்தில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் சிப்செட்
இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த ஒன்பிளஸ் பேட் ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 9000 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த Dimensity 9000 சிப்செட். எனவே இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.
ஒன்பிளஸ் பேட் மாடலில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த டேப்லெட் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
ஒன்பிளஸ் பேட் மாடல் ஆனது 11.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி 2கே டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் பேட்.

இந்த புதிய ஒன்பிளஸ் பேட் மாடலில் 13எம்பி ரியர் கேமரா வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் பேட்.
தரமான பேட்டரி
ஒன்பிளஸ் பேட் மாடலில் 9500 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலில் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் பேட் வெளிவரும்.
வைஃபை,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் பேட். மேலும் இந்த புதிய டேப்லெட் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஒன்பிளஸ் பேட்.

அதேபோல் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் விலை இணையத்தில் வெளிவந்துள்ளது. அதாவது ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்படும். அவைகள் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகும். இதில் ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை நிர்ணயம், அதாவது 16ஜிபி ரேம் ஆப்ஷனின் விலை நிர்ணயம் ரூ.61,999 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications