பொளந்து கட்டிய OnePlus.. பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 9510mAh பேட்டரி.. குவாட் ஸ்பீக்கர்கள்..எந்த மாடல்?
இந்திய பட்ஜெட் பிரியர்களை வெயிட்டி மோடில் போடும்படியான பட்ஜெட்டில் 2K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9510mAh பேட்டரி, குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், 6.49 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடியுடன் ஒன்பிளஸ் பேட் ப்ரோ (OnePlus Pad Pro) டேப்லெட் அறிமுகமாகி இருக்கிறது. இந்த டேப்லெட் குறித்த விவரம் இதோ.
ஒன்பிளஸ் பேட் ப்ரோ அம்சங்கள் (OnePlus Pad Pro Specifications): இந்த டேப்லெட்டில் 12.1 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது.

மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் வருகிறது.
ஆகவே, இந்த டேப்லெட்டில் முந்தைய மாடல்களைவிட கூடுதலாக கிடைக்கும் பர்ஃமென்ஸ் பின்னிப்பெடல் எடுக்கும்படி இருக்கும். கலர்ஓஎஸ் 14.0 (ColorOS 14.0) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Quad Stereo Speakers) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஆடியோ மற்றும் வீடியோ அனுபவம் பிரீமியமாக இருக்கும்.
இந்த டேப்லெட்டில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9510mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி உடன் 584 கிராம் எடை மற்றும் அல்ட்ரா ஸ்லிம் லுக்கில் 6.49 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) வருகிறது.
இந்த ஒன்பிளஸ் பேட் ப்ரோ மாடலின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், என்எப்சி (NFC), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் வெர்ஷன் 5.3 (Bluetooth Version 5.3) வருகிறது. இந்த ஒன்பிளஸ் பேட் ப்ரோ டேப்லெட்டில் ஸ்பேஸ் கிரே (Space Grey) மற்றும் காக்கி கிரீன் (Khaki Green) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.
இந்த டேப்லெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.32,133ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.34,429ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.37,870ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.42,462ஆகவும் இருக்கிறது.
இப்போது, சீன மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்திய உள்பட மற்ற நாடுகளில் அடுத்த சில வாரங்களில் இந்த ஒன்பிளஸ் பேட் ப்ரோ டேப்லெட்டை எதிர்பார்க்கலாம். பட்ஜெட்டில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 9510mAh பேட்டரி வருவதால், இந்திய பிரியர்களிடையே நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications