விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட்: ஆன்லைனில் கசிந்த விலை?
ஒன்பிளஸ் நிறுவனம் தரமான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் ஒன்பிளஸ் பேட் எனும் முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது.
குறிப்பாக இந்த புதிய டேப்லெட் மாடலின் முன்பதிவு கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது. அதேபோல் வரும் ஏப்ரல் 28 அல்லது ஏப்ரல் 30-ம் தேதிகளில் இந்த ஒன்பிளஸ் பேட் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் பேட் மாடலின் விலை ஆன்லைனில் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது ஒன்பிளஸ் பேட் ஆனது ரூ.30,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டேப்லெட் மாடலுக்கு அறிமுக சலுகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஒன்பிளஸ் பேட் எனும் டேப்லெட் மாடலின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
2.5டி கர்வ்டு எட்ஜ் கிளாஸ் டிசைன் உடன் 11.61 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் பேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 144Hz வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 2800x2000 பிக்சல்ஸ், டால்பி விஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஒன்பிளஸ் பேட் வெளிவந்துள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 9000 ப்ராசஸர் வசதியைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வெளிவந்துள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ப்ராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒன்பிளஸ் பேட் ஆனது 5ஜி கனெக்டிவிட்டியையும் (5G Connectivity) ஆதரிக்கிறது. இருப்பினும், இந்த டேப்லெட் செல்லுலார் கனெக்டிவிட்டி சப்போர்ட்(Cellular connectivity support) உடன் வராது.

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் பேட். மேலும் ஆக்ஸிஜென் 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
13எம்பி சிங்கிள் ரியர் கேமராவைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் பேட் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல். அதேபோல் 30fps வேகத்தில் 4கே வீடியோக்களை (4K Video) பதிவு செய்யும் திறன் கொண்டது இந்த ஒன்பிளஸ் டேப்லெட்.
9510எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் பேட். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். குறிப்பாக 67 வாட்ஸ் பாஸ்ட்; சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் பேட். மேலும் டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் டால்பி அட்மோஸை (Dolby Atmos) கொண்டு இந்த ஒன்பிளஸ் பேட் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் பேட் ஆனது ஹாலோ கிரீன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டேப்லெட் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications