யாருமே எதிர்பார்க்கல.. 9340mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. புது OnePlus டேப்லெட் அறிமுகம்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பேட் லைட் (OnePlus Pad Lite) மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்டலெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது தனித்துவமான வடிவமைப்பு அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ஒன்பிளஸ் பேட் லைட் அம்சங்கள் (OnePlus Pad Lite Specifications): 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1200 பிக்சல்ஸ், 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio), 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் மீடியாடெக் ஹீலியோ ஜி100 (MediaTek Helio G100) சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் பேட் லைட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி மெமரி நீட்டிப்பு ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இல்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆக்ஸிஜன்ஓஎஸ் 15.0.1. ( OxygenOS 15.0.1.) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த சாதனம் இயங்குகிறது. ஆனாலும் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்டெல் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
5எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா உடன் இந்த புதிய ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளது. ஹை-ரெஸ் ஆடியோவுடன்(Hi-Res audio) கூடிய குவாட் ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

9340mAh பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த டேப்லெட் மாடலை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. IP42 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் வெளிவந்துள்ளது.
ப்ளூடூத் 5.2, வைஃபை 5, எஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒன்பிளஸ் பேட் லைட் மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட் மாடலின் எடை 530 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை €199 (இந்திய மதிப்பில் ரூ.19,992) ஆகும்.


Click it and Unblock the Notifications








