Home
Tablets

இது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. 9340mAh பேட்டரி.. ஆண்ட்ராய்டு 15 OS.. ஆஃபரில் OnePlus டேப்லெட்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் கிரேட் சம்மர் சேல் எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் டேப்லெட் மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் பேட் லைட் மாடலும் இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதன்படி அமேசான் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் பேட் லைட் மாடலுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.1699 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டேப்லெட் மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

இது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. ஆஃபரில் OnePlus டேப்லெட்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் பேட் லைட் அம்சங்கள் (OnePlus Pad Lite Specifications): தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி100 (MediaTek Helio G100) சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் பேட் லைட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதுவும் 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1200 பிக்சல்ஸ், 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio), 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதுவும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வசதியும் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் மாடலில் உள்ளது.

குறிப்பாக ஆக்ஸிஜன்ஓஎஸ் 15.0.1. ( OxygenOS 15.0.1.) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த ஒன்பிளஸ் பேட் லைட் சாதனம் இயங்குகிறது. ஆனாலும் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்டெல் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

அதேபோல் 5எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா உடன் இந்த புதிய ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் வெளிவந்துள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளது. ஹை-ரெஸ் ஆடியோவுடன்(Hi-Res audio) கூடிய குவாட் ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

9340mAh பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் பேட் லைட் மாடல்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த டேப்லெட் மாடலை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. IP42 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் வெளிவந்துள்ளது.

ப்ளூடூத் 5.2, வைஃபை 5, எஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒன்பிளஸ் பேட் லைட் மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட் மாடலின் எடை 530 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Pad Lite is available at 15 percent discount in Amazon Summer Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X