Home
Tablets

மார்க்கெட்டே மிரள போகுது.. 9340mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. வருகிறது புதிய OnePlus டேப்லெட்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் பேட் லைட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் பேட் கோ மாடலை போன்று இந்த ஒன்பிளஸ் பேட் லைட் (OnePlus Pad Lite) மாடலும் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த புதிய டேப்லெட் மாடலின் படங்கள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் பின்புறம் ஒரு வட்ட வடிவ கேமரா உள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில்கள் டேப்லெட்டின் வலது பக்கத்தில் அமைந்துள்ளன.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புதிய OnePlus டேப்லெட்..

மேலும் இந்த சாதனத்தின் எடை 539 கிராம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு ஏரோ ப்ளூ (Aero Blue) நிறத்தில் இந்த டேப்லெட் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் பேட் லைட் மாடலின் முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பேட் லைட் அம்சங்கள் (OnePlus Pad Lite Specifications): 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920×1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே வதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் ஹீலியோ ஜி100 (MediaTek Helio G100) சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் பேட் லைட் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் விற்பனைக்கு வரும். அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. குறிப்பாக ஆக்ஸிஜன்ஓஎஸ் 15.0.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த சாதனம் இயங்குகிறது. ஆனாலும் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் 5எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா உடன் இந்த புதிய ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளது. அதேபோல் cellular + Wi-Fi 5 (802.11ac), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் பேட் லைட் ஆனது 9340mAh பேட்டரி வசதியுடன் வெளிவரும். எனவே இந்த டேப்லெட் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ரூ.20,000-க்கு கீழ் இந்த ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் அறிமுகமாகும்.

photo credit: @ONLEAKS x @91MOBILES

Best Mobiles in India

English summary
OnePlus Pad Lite design and specifications revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X