ஆர்டர் பிச்சிக்குது.. வெறும் ரூ.17,999 போதும்.. 8000mAh பேட்டரி.. 8GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
"டேப்லெட் வாங்க முடிவெடுத்தால், இந்த டேப்லெட்டை மட்டுமே வாங்க வேண்டும்" என்று சொல்லும் அளவுக்கு 8ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 33W சார்ஜிங், 8000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் கம்மி பட்ஜெட்டில் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் விற்பனைக்கு வந்துள்ளது.
ஒன்பிளஸ் பேட் கோ அம்சங்கள் (OnePlus Pad Go Specifications): இந்த டேப்லெட் 11.3 இன்ச் (2408 x 1720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 2.4K ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 260 பிபிஐ (PPI) மற்றும் 180Hz டச் சாம்பிளிங்ரேட் வருகிறது.

இதுவொரு ஐ-கேர் (Eye-care) மாடல் டிஸ்பிளேவாகும். இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.2 (OxygenOS 13.2) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) வருகின்றன. ஆகவே, ஆடியோ அனுபவம் கிரிஸ்டல் கிளியர் தரத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஸ்டோரேஜ் பற்றிய கவலை, இந்த டேப்லெட்டில் கிடையாது. இந்த மாடலில் 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த மெயின் கேமராவில் ஈஐஎஸ் ஸ்டெபிலைசேஷன் (EIS Stabilization) மற்றும் 30fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட்டின் பேட்டரி அம்ங்களும் பிரம்மாண்டமாக வருகின்றன. 33W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பேஸ் அன்லாக் (Face Unlock) கொண்டிருக்கிறது.
இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டில் ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor), லைட் சென்சார் (Light Sensor), ஆக்சிலரேஷன் சென்சார் (Acceleration Sensor), ஹால் சென்சார் (Hall Sensor) மற்றும் கைரோஸ்கோப் (Gyroscope) ஆகியவை வருகின்றன. இந்த மாடலில் 4ஜி எல்டிஇ (4G LTE), ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2) மற்றும் வை-பை 5 (Wi-Fi 5) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
இந்த டேப்லெட் டுவின் மின்ட் (Twin Mint) கலரில் வி்ற்பனைக்கு வருகிறது. பேட்டரியோடு சேர்த்து, 532 கிராம் எடைக்கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை மாடலின் விலை ரூ.19,999ஆகவும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட எல்டிஇ மாடலின் விலை ரூ.21,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட எல்டிஇ மாடலின் விலை ரூ.23,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை ஒன்பிளஸ் ஸ்டோர் (OnePlus Store), அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். இதில் அமேசானில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
அதேபோல பிளிப்கார்ட்டில் ஐசிஐசிஐ மற்றும் ஒன்கார்டு டெபிட் கார்டுகளுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டை பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.17,999க்கு பெற்றுக் கொள்ளலாம். பட்ஜெட் விலையில், பிராண்ட் டேப்லெட் வாங்க வேண்டும் என்று நினைத்தால், இந்த ஒன்பிளஸ் பேட் கோ நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








