Home
Tablets

மளமளவென இறங்கிய OnePlus டேப்லெட் விலை.. 8000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் big saving days எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் டேப்லெட் மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விற்பனையில் மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் (OnePlus) டேப்லெட் மாடலும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை ரூ.15749 விலையில் வாங்கிவிட முடியும்.

மளமளவென இறங்கிய OnePlus டேப்லெட் விலை.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் பேட் கோ அம்சங்கள் (OnePlus Pad Go specifications): 11.35-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் டால்பி விஷன், எச்டிஆர் பிளஸ் சப்போர்ட், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், TuV Rheinland ப்ளூ-லைட் ஃபில்டர் பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே.

ஹீலியோ ஆக்டோ-கோர் ( Helio G99 octa-core) சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதனுடன் மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.

OxygenOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். ஆனால் இந்த டேப்லெட் மாடலுக்கு பாதுகாப்பு அப்டேட் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (quad stereo speakers) கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் டேப்லெட்.

இந்த ஒன்பிளஸ் டேப்லெட் 8எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் வெளிவந்துள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

மளமளவென இறங்கிய OnePlus டேப்லெட் விலை.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட்.மேலும் புளூடூத் 5.3, வைஃபை , ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகளுடன் ஒன்பிளஸ் பேட் கோ வெளிவந்துள்ளது. பச்சை நிறத்தில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடல் 8000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது . மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W சூப்பர்வூக் (33W SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் ஆனது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad Go with 8GB RAM price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X