Home
Tablets

வாரி தூக்கும் பட்ஜெட்.. 8000mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. அறிமுகமானது புது OnePlus டேப்லெட்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் இன்று புதிய ஒன்பிளஸ் பேட் கோ எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டேப்லெட் ஆனது 2.4கே டிஸ்பிளே, டால்பி ஆடியோ மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டேப்லெட் மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

ஒன்பிளஸ் பேட் கோ அம்சங்கள் (OnePlus Pad Go specifications): 11.35-இன்ச் 2.4K பிக்சல்ஸ் கொண்ட டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் டால்பி விஷன், எச்டிஆர் பிளஸ் சப்போர்ட், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், TuV Rheinland ப்ளூ-லைட் ஃபில்டர் பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே.

256ஜிபி மெமரி.. அறிமுகமானது புது OnePlus டேப்லெட்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஹீலியோ ஆக்டோ-கோர் ( Helio G99 octa-core) சிப்செட் வசதியை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட். மேலும் இதனுடன் மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU)கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும்.

குறிப்பாக கேமிங் பயனர்களுக்கு தகுந்தபடி இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒன்பிளஸ் பேட் கோ விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

ஒன்பிளஸ் பேட் கோ ஆனது OxygenOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. ஆனால் இந்த டேப்லெட் மாடலுக்கு பாதுகாப்பு அப்டேட் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (quad stereo speakers) கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் டேப்லெட்.

எனவே ஒன்பிளஸ் பேட் கோ ஆனது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் 8எம்பி ரியர் கேமராைவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட். குறிப்பாக இந்த ரியர் கேமரா உதவியுடன் 4K30 fps வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் வெளிவந்துள்ளது.

33 வாட்ஸ் சூப்பர்வூக் (33W SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 8000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் பேட் கோ மாடல். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் ஆனது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இதை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

புளூடூத் 5.3, வைஃபை 6, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், எல்இடி மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ஒன்பிளஸ் பேட் கோ வெளிவந்துள்ளது. பச்சை நிறத்தில் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மாடல் ஆனது தரமான வடிவமைப்புடன் அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

256ஜிபி மெமரி.. அறிமுகமானது புது OnePlus டேப்லெட்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் பேட் கோ 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வைஃபை (WiFi) வேரியண்ட் விலை ரூ.19,999-ஆக உள்ளது. அதேபோல் ஒன்பிளஸ் பேட் கோ 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி எல்டிஇ (LTE) வேரியண்ட் ரு.21,999 விலையிலும், இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி எல்இடி (LTE) வேரியண்ட் ரூ.23,999- விலையிலும் விற்பனை செய்யப்படும். வரும் அக்டோபர் 12-ம் தேதி இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடலை முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு ரூ.2000 வங்கி தள்ளுபடியும் கிடைக்கும்.

வரும் அக்டோபர் 20-ம் தேதி ஒன்பிளஸ் பேட் கோ ஆனது விற்பனைக்கு வருகிறது. அமேசான், பிளிப்கார்ட், ஒன்பிளஸ் மற்றும் முன்னணி ஆஃப்லைன் தளங்களில் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad Go With 8000mAh battery launched in India: check price, specifications, sale date: check details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X