வந்தா வாரி தூக்குவீங்க.. 11.35-இன்ச் டிஸ்பிளே.. 8ஜிபி ரேம்.. மிரட்டலான OnePlus டேப்லெட்.. எப்போது அறிமுகம்?
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பேட் கோ எனும் புதிய டேப்டெல் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது வெளியான தகவலின்படி வரும் அக்டோபர் 6-ம் தேதி இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடல் இந்தியாவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரிய டிஸ்பிளே, தரமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த ஒன்பிளஸ் பேட் கோ வெளிவரும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) மாடல் ஆனது 11.35-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த டேப்லெட் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 2.4கே ரெசல்யூஷன், 7:5 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் மாடலில் நாம் கண்டதை போலவே ஒன்பிளஸ் பேட் கோ மாடலிலும் நாம் சிங்கிள் ரியர் கேமரா செட்டப் (Single Rear Camera Setup) மற்றும் நான்கு ஸ்பீக்கர்களை காணலாம். அதாவது டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.
குறிப்பாக இந்த டேப்லெட் தரமான ஆடியோவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பயனர்கள் வைஃபை இணைப்பை பயன்படுத்தாமலேயே தங்கள் ஸ்க்ரீன்களை ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் உடன் பகிர்ந்து கொள்ள முடியும் (Screen Sharing).
இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் சக்திவாய்ந்த மீடியாடெக் பிராசஸர் (MediaTek processor) உள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம். அதாவது இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்படும் பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த டேப்டெல் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
அதேபோல் கலர்ஓஸ் 13.2 (ColorOS 13.2) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட் ஆனது 523 கிராம் எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் பேட் கோ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்டெல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
குறிப்பாக இந்த டேப்லெட் ஒன்று வைஃபை-ஒன்லி (WiFi Only), மற்றொன்று வைஃபை மற்றும் செல்லுலார் கனெக்டிவிட்டி (WiFi and Cellular Connectivity) உடன் வரலாம். மேலும் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டில் அதே கர்வ்டு எட்ஜ் டிசைன் (Curved Edge Design) மற்றும் கேமரா செட்டப்பை (Camera Setup) நாம் பார்க்கலாம். பின்பு இந்த டேப்லெட் தரமான கேமரா அம்சங்களுடன் வெளிவரும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் பெரிய பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேசமயம் விரைவில் இந்த டேப்லெட் மாடலை சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு இந்த டேப்லெட் ஆனது கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








