OnePlus டேப்லெட் விலை குறைந்தது.. 8000mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) மாடல் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த டேப்லெட் டால்பி அட்மாஸ், பெரிய டிஸ்பிளே, மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (OnePlus Pad Go) கிராபிக்ஸ் கார்டு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் பேட் கோ மாடல் ஆனது முன்பு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த டேப்லெட் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ரூ.1000 கூப்பன் சலுகையும் வழங்கப்படுகிறது. எனவே இந்த சாதனத்தை ரூ.14,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஒன்பிளஸ் பேட் கோ அம்சங்கள் (OnePlus Pad Go specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி99 ( MediaTek Helio G99) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட். இதனுடன் மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் 11.35-இன்ச் 2.4K பிக்சல்ஸ் கொண்ட டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் டால்பி விஷன், எச்டிஆர் பிளஸ் சப்போர்ட், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், TuV Rheinland ப்ளூ-லைட் ஃபில்டர் பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே.
குறிப்பாக ஒன்பிளஸ் பேட் கோ ஆனது OxygenOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. ஆனால் இந்த டேப்லெட் மாடலுக்கு பாதுகாப்பு அப்டேட் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (quad stereo speakers) கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் டேப்லெட்.
அதுவும் 8எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட். குறிப்பாக இந்த ரியர் கேமரா உதவியுடன் 30 fps வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் வெளிவந்துள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது .மேலும் வைஃபை ,புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகளுடன் ஒன்பிளஸ் பேட் கோ வெளிவந்துள்ளது. ட்வின் மின்ட் (Twin Mint) கலரில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும்.
குறிப்பாக 8000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் பேட் கோ மாடல். மேலும் இதை சார்ஜ் செய்ய 33W சூப்பர்வூக் (33W SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் ஆனது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.


Click it and Unblock the Notifications








