லட்டு மாதிரி ஆஃபர்.. 8000mAh பேட்டரி.. 256GB மெமரி.. புது ஒன்பிளஸ் டேப்லெட் விற்பனைக்கு ரெடி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் பேட் கோ எனும் டேப்லெட் மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது ஒன்பிளஸ் நிறுவனம். இந்த புதிய டேப்லெட் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவந்தது. இந்நிலையில் ஒன்பிளஸ் பேட் கோ மாடலின் விற்பனை தேதி மற்றும் முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
அதன்படி வரும் அக்டோபர் 20-ம் தேதி முதல் அமேசான், பிளிப்கார்ட், ஒன்பிளஸ்.இன் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் உள்ளிட்ட பல தளங்களில் இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடலை வாங்க முடியும். மேலும் இன்று முதல் (அக்டோபர் 12) ஒன்பிளஸ் பேட் கோ மாடலை முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் பேட் கோ 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வைஃபை (WiFi) வேரியண்ட் விலை ரூ.19,999-ஆக உள்ளது. அதேபோல் ஒன்பிளஸ் பேட் கோ 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி எல்டிஇ (LTE) வேரியண்ட் ரு.21,999 விலையிலும், இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி எல்இடி (LTE) வேரியண்ட் ரூ.23,999- விலையிலும் விற்பனை செய்யப்படும்.
குறிப்பாக ஒன்பிளஸ் பேட் கோ மாடலை முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு ரூ.2000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். ஆனால் இதற்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த வேண்டும். பின்பு இந்த டேப்லெட் மாடலை முன்பதிவு செய்யும் பயனர்கள் ரூ.1399 மதிப்புள்ள ஒன்பிளஸ் பேட் கோ Folio கவரை கட்டணமின்றி பெறலாம். மேலும் இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் மாடலை வாங்க நினைக்கும் பயனர்கள் RCC (ரெட் கேபிள் கிளப்) உறுப்பினர்கள் ரூ.2000 மதிப்புள்ள சலுகைகளை பெறமுடியும்.
11.35-இன்ச் 2.4K பிக்சல்ஸ் கொண்ட டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் டால்பி விஷன், எச்டிஆர் பிளஸ் சப்போர்ட், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், TuV Rheinland ப்ளூ-லைட் ஃபில்டர் பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே.
ஹீலியோ ஆக்டோ-கோர் ( Helio G99 octa-core) சிப்செட் வசதியை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட். மேலும் இதனுடன் மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU)கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்களுக்கு தகுந்தபடி இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் பேட் கோ ஆனது OxygenOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. ஆனால் இந்த டேப்லெட் மாடலுக்கு பாதுகாப்பு அப்டேட் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (quad stereo speakers) கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் டேப்லெட்.
அதேபோல் 8எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட். குறிப்பாக இந்த ரியர் கேமரா உதவியுடன் 4K30 fps வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் வெளிவந்துள்ளது.

33 வாட்ஸ் சூப்பர்வூக் (33W SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 8000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் பேட் கோ மாடல். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் ஆனது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இதை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
புளூடூத் 5.3, வைஃபை 6, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், எல்இடி மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ஒன்பிளஸ் பேட் கோ வெளிவந்துள்ளது. பச்சை நிறத்தில் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மாடல் ஆனது தரமான வடிவமைப்புடன் அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








