அதிருது மார்கெட்.. 8000mAh பேட்டரி.. 11.35-இன்ச் டிஸ்பிளே.. வருகிறது புதிய ஒன்பிளஸ் டேப்லெட்..
ஒன்பிளஸ் நிறுவனம் அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது வரும் அக்டோபர் 6-ம் தேதி ஒன்பிளஸ் பேட் கோ எனும் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம். இந்நிலையில் இந்த டேப்டெல் மாடலின் விற்பனை விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இதுகுறித்து விரிவான தகலை இப்போது பார்ப்போம்.

ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ட்வின் மிண்ட் (Twin Mint) நிறத்தில் இந்த டேப்லெட் மாடல் வாங்க கிடைக்கும். மேலும் இந்த டேப்லெட் கம்மி விலையில் விற்பனைக்கு வரும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்பட்டுள்ளது. இப்போது இந்த டேப்லெட் மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.
ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) மாடல் ஆனது 11.35-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த டேப்லெட் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 2.4கே ரெசல்யூஷன், 7:5 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் மாடலில் நாம் கண்டதை போலவே ஒன்பிளஸ் பேட் கோ மாடலிலும் நாம் சிங்கிள் ரியர் கேமரா செட்டப் (Single Rear Camera Setup) மற்றும் நான்கு ஸ்பீக்கர்களை காணலாம். அதாவது டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.
இந்த டேப்லெட் தரமான ஆடியோவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பயனர்கள் வைஃபை இணைப்பை பயன்படுத்தாமலேயே தங்கள் ஸ்க்ரீன்களை ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் உடன் பகிர்ந்து கொள்ள முடியும் (Screen Sharing).
ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் (Helio G99 Chipset) உள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம். அதாவது இந்த ஹீலியோ ஜி99 சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த டேப்டெல் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
அதேபோல் கலர்ஓஸ் 13.2 (ColorOS 13.2) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட் ஆனது 523 கிராம் எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் பேட் கோ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்டெல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.

இந்த டேப்லெட் ஒன்று வைஃபை-ஒன்லி (WiFi Only), மற்றொன்று வைஃபை மற்றும் செல்லுலார் கனெக்டிவிட்டி (WiFi and Cellular Connectivity) உடன் வரலாம். மேலும் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டில் அதே கர்வ்டு எட்ஜ் டிசைன் (Curved Edge Design) மற்றும் கேமரா செட்டப்பை (Camera Setup) நாம் பார்க்கலாம். பின்பு இந்த டேப்லெட் தரமான கேமரா அம்சங்களுடன் வெளிவரும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 8எம்பி செல்பி கேமரா மற்றும் 8எம்பி ரியர் கேமரா ஆதரவு இதில் உள்ளது. மேலும் 8000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடல் அறிமுகமாகும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த டேப்லெட் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








