Home
Tablets

இதுபோதுமே குருநாதா.. ரூ.15,300 பட்ஜெட்ல 8000mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் OnePlus டேப்லெட்..

அமேசான் தளத்தில் Amazon Great Summer Sale 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் டிவி, லேப்டாப், டேப்லெட், போன் உள்ளிட்ட பல சாதனங்கள் கம்மி விலையில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) எனும் டேப்லெட் மாடலும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் பேட் கோ மாடலுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.1699 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை ரூ.15300 விலையில் வாங்கிவிட முடியும்.

இதுபோதுமே குருநாதா.. ஆஃபரில் OnePlus டேப்லெட்..

ஒன்பிளஸ் பேட் கோ அம்சங்கள் (OnePlus Pad Go specifications): 11.35-இன்ச் 2.4K பிக்சல்ஸ் கொண்ட டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வெளிவந்துள்ளது. டால்பி விஷன், 400 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் பிளஸ் சப்போர்ட், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், TuV Rheinland ப்ளூ-லைட் ஃபில்டர் பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே.

மீடியாடெக் ஹீலியோ ஆக்டோ-கோர் ( Helio G99 octa-core) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட். மேலும் இதனுடன் மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.

OxygenOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது ஒன்பிளஸ் பேட் கோ. ஆனால் இந்த டேப்லெட் மாடலுக்கு பாதுகாப்பு அப்டேட் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (quad stereo speakers) கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் டேப்லெட்.

குறிப்பாக 8எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட். இந்த ரியர் கேமரா உதவியுடன் 4K30 fps வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் வெளிவந்துள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

அதேபோல் 8000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் பேட் கோ மாடல். மேலும் இதை சார்ஜ் செய்ய 33W சூப்பர்வூக் (33W SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் ஆனது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும்.

மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். புளூடூத் 5.3, வைஃபை , ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகளுடன் ஒன்பிளஸ் பேட் கோ வெளிவந்துள்ளது. பச்சை நிறத்தில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad Go is available at discounted price Amazon Great Summer sale: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X