Home
Tablets

கிடுகிடுவென உயர்ந்த ஒன்பிளஸ் 5ஜி டேப்லெட் விலை.. 10050mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் டேப்லெட் மாடல்களின் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒன்பிளஸ் நிறுவனமும் டேப்லெட் மாடலின் விலையை உயர்த்தியுள்ளது. அதாவது தற்போது ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடலின் விலை உயர்ந்துள்ளது. இப்போது இந்த மாடலின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் பேட் கோ 2 (Wi-Fi) ரூ.26,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த மாடலின் விலை உயர்த்தப்பட்டு ரூ.29,999 விலையில் வாங்க கிடைக்கும்.

கிடுகிடுவென உயர்ந்த ஒன்பிளஸ் 5ஜி டேப்லெட் விலை.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் பேட் கோ 2 (Wi-Fi) மாடல் ரூ.29,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த மாடலின் விலை உயர்த்தப்பட்டு ரூ.32,999 விலையில் வாங்க கிடைக்கும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் பேட் கோ 2 ( Wi-Fi + 5G) மாடல் ரூ.32,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த மாடலின் விலை உயர்த்தப்பட்டு ரூ.35,999 விலையில் வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் பேட் கோ 2 அம்சங்கள் (OnePlus Pad Go 2 specifications): 12.1-இன்ச் 2.8கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800 x 1980 பிக்சல்ஸ், 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 7300-அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7300-Ultra chipset) உடன் இந்த ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஒன்பிளஸ் டேப்வெட் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இந்த ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடல் 10050mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் 6.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். லாவெண்டர் டிரிஃப்ட் (Lavender Drift) மற்றும் ஷேடோ பிளாக் பினிஷ் (Shadow Black finish) நிறங்களில் ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடலை வாங்க முடியும்.

கிடுகிடுவென உயர்ந்த ஒன்பிளஸ் 5ஜி டேப்லெட் விலை.. எந்த மாடல்?

8எம்பி ரியர் கேமரா உடன் இந்த ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது இந்த டேப்லெட். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளன.

5ஜி ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் வைஃபை 802.11. ஏஎக்ஸ், புளூடூத் 5.4, யூ.எஸ்.பி டைப்-சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட் மாடலில் உள்ளன.

Best Mobiles in India

English summary
OnePlus Pad Go 2 price hiked silently in India: Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X