Home
Tablets

டிச.17-ல் அறிமுகமாகும் புதிய OnePlus டேப்லெட்.. 10,050mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் பேட் கோ 2 (OnePlus Pad Go 2) மாடலை வரும் டிசம்பர் 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் டிசம்பர் 18-ம் தேதி விற்பனைக்கு வரும். இந்நிலையில் இந்த புதிய டேப்லெட் மாடலின் விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பேட் கோ 2 அம்சங்கள் (OnePlus Pad Go 2 Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300-அல்ட்ரா ஆக்டா-கோர் சிப்செட்(MediaTek Dimensity 7300-Ultra octa-core) உடன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

டிச.17-ல் அறிமுகமாகும் புதிய OnePlus டேப்லெட்.. 10,050mAh பேட்டரி..

அதேபோல் 12.1-இன்ச் டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் சப்போர்ட், 98 சதவீதம் டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக இந்த டேபலெட் மாடலின் டிஸ்பிளேவானதுTÜV Rheinland சான்றிதழ் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் உடன் ஸ்டைலோ ஒன்றும் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அம்சங்களுடன் வெளிவரும்.

10,050mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடல் அறிமுகம் செய்யப்படும். அதுவும் 15 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக், 53 மணி நேர மியூசிக் பிளேபேக், 60 நாட்கள் வரை ஸ்டேன்ட்பை டைம் வழங்குகிறது இந்த டேப்டெல். எனவே இந்த டேப்லெட் வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட் மாடலின் பேட்டரியை சார்ஜ் செய்ய33W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. பின்பு இந்த டேப்லெட் ரிவர்ஸ் கேபிள் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதனால் பயனர்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது பிற சாதனங்களை சார்ஜ் செய்ய டேப்லெட்டின் பேட்டரியைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

இந்த டேப்லெட் ஆனது ஸ்பிளிட்-ஸ்கிரீன் மோட் ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஒரு 5ஜி டேப்லெட் ஆகும். அதுவும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 15 அல்லது ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

5ஜி, 4ஜி வோல்ட், வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடலில் உள்ளன. இந்த ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடல் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடல் உடன் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்படும். இந்த போனும் பெரிய பேட்டரி, டூயல் ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad Go 2 key specifications leaked ahead of December 17th launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X