Home
Tablets

இந்தியாவுக்கு வரும் புதிய OnePlus டேப்லெட்.. 256ஜிபி மெமரி.. 5ஜி ஆதரவு.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் டிசம்பர் 17-ம் தேதி ஒன்பிளஸ் பேட் கோ 2 (OnePlus Pad Go 2) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும். குறிப்பாக அமேசான் தளத்தில் இந்த புதிய டேப்லெட் விற்பனைக்கு வரும்.

ஒன்பிளஸ் பேட் கோ 2 அம்சங்கள் (OnePlus Pad Go 2 Specifications): 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி உடன் ஒன்பிளஸ் பேட் கோ 2 வெளிவரும். மேலும் இந்த சாதனம் ஷேடோ பிளாக் (Shadow Black) நிறத்தில் அறிமுகமாகும். அதேபோல் சிங்கிள் ரியர் கேமரா, 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

இந்தியாவுக்கு வரும் புதிய OnePlus டேப்லெட்.. எந்த மாடல்?

குறிப்பாக ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடல் ஆனது கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் சில அம்சங்கள் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் இந்த சாதனத்தின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே வெளியான ஒன்பிளஸ் பேட் கோ மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பேட் கோ அம்சங்கள் (OnePlus Pad Go specifications): 11.35-இன்ச் 2.4K பிக்சல்ஸ் கொண்ட டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் டால்பி விஷன், எச்டிஆர் பிளஸ் சப்போர்ட், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், TuV Rheinland ப்ளூ-லைட் ஃபில்டர் பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 ( MediaTek Helio G99) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட். இதனுடன் மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.

ஒன்பிளஸ் பேட் கோ ஆனது OxygenOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. ஆனால் இந்த டேப்லெட் மாடலுக்கு பாதுகாப்பு அப்டேட் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (quad stereo speakers) கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் டேப்லெட்.

8எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் டேப்லெட். குறிப்பாக இந்த ரியர் கேமரா உதவியுடன் 30 fps வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் வெளிவந்துள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

இந்தியாவுக்கு வரும் புதிய OnePlus டேப்லெட்.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் .மேலும் வைஃபை ,புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகளுடன் ஒன்பிளஸ் பேட் கோ வெளிவந்துள்ளது. ட்வின் மின்ட் (Twin Mint) கலரில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும்.

8000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் பேட் கோ மாடல். மேலும் இதை சார்ஜ் செய்ய 33W சூப்பர்வூக் (33W SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் ஆனது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். தற்போது இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடல் ஆனது ரூ.16,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad Go 2 India launch date revealed: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X