அண்ணன் வந்துட்டார்.. 13380mAh பேட்டரி, 80W சார்ஜிங், 12GB ரேம் உடன் புது OnePlus டேப்லெட்.. எந்த மாடல், விலை?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு புதிய டேப்லெட் மாடலை அறிமுக செய்ய தயாராக உள்ளது. அது ஒன்பிளஸ் பேட் 4 (OnePlus Pad 4) மாடல் ஆகும். இது நாளை, அதாவது ஏப்ரல் 30 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் பேட் 4 இந்திய வெளியீட்டு விவரங்கள்: ஒன்பிளஸ் பேட் 4 டேப்லெட் மாடலானது ஏப்ரல் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான ஒன்பிளஸ் பேட் 3 மாடலுடன் ஒப்பிடும் போது, -இது சற்றே முன்னதாக அறிமுகமாகிறது.

இந்தாண்டு ஒன்பிளஸ் நிறுவனம் அதன் வெளியீடுகளை சற்று முன்கூட்டியே அறிமுகம் செய்து வருகிறது. உதாரணமாக, ஒன்பிளஸ் நார்ட் 6 (OnePlus Nord6) ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே வெளியானதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது ஒரு தீவிரமான தயாரிப்பு சுழற்சியை குறிக்கிறது.
ஒன்பிளஸ் பேட் 4 டிசைன்: வெளியீட்டு தேதி குறித்த போஸ்டரில் ஒன்பிளஸ் பேட் 4 டேப்லெட்டை அடர் பழுப்பு நிறத்தில் காண முடிகிறது. அதன் மேல் இடது மூலையில் பில்-ஷேப்ட்டு கேமரா மாட்யூலையும் பார்க்க முடிகிறது. மேலும் வெளியான டீசஸ் ஆனது இந்த டேப்லெட் மிகவும் ஸ்லிம் ஆகவும், டிஸ்பிளே அளவில் மிகவும் பெரியதாகவும் இருக்கும் என்பது போலவும் தெரிகிறது.
ஒன்பிளஸ் பேட் 4 அம்சங்கள்: ஒன்பிளஸ் பேட் 4 மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிளாக்ஷிப் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் - ஒன்பிளஸின் இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆனது உயர்தர செயல்திறனை வழங்குவதை உறுதி செய்கிறது.
மேலும், ஒன்பிளஸ் பேட் 4 மாடல் ஆனது 12ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 512GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும். மேலும் இந்த டேப்லெட்டில் 80W சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பிரம்மாண்டமான 13,380 mAh பேட்டரி இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரி திறன் மூலம், ஒன்பிளஸ் பேட் 4 பேட்டரி லைஃப் ஆனது ஒரு நாளுக்கும் மேலாக நீடிக்கலாம்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய பெரிய 13.2-இன்ச் 3.4கே டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது கன்டென்ட்களை பார்ப்பதற்கும், ப்ரொடெக்டிவிட்டிக்கும், கேமிங்கிற்கும் ஏற்ற ஒரு பெரிய மற்றும் பிரகாசமான ஸ்க்ரீனாக இருக்கும். மேலும் இந்த டேப்லெட், மிகவும் துல்லியமாக எழுதுவதற்கும் வரைவதற்கும் வடிவமைக்கப்பட்ட புதிய ஒன்பிளஸ் ஸ்டைலோ ப்ரோவுடன் அறிமுகமாகும். இது ஒரு ஸ்மார்ட் கீபோர்டுடனும் வரும்.
முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், ஒன்பிளஸ் பேட் 4 டேப்லெட் ஆனது ஒன்பிளஸ் பேட் 3 மாடலை விட வேகமான சிப்செட் மற்றும் பெரிய பேட்டரியை வழங்கும். மற்ற அம்சங்கள் பெரும்பாலும் அப்படியே இருக்கலாம். ஒன்பிளஸ் பேட் 4 மாடலில் இருப்பது இன்னுமும் ஒரு எல்சிடி டிஸ்பிளேதான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
இது சாம்சங்கின் கேலக்ஸி டேப் எஸ்11 சீரீஸ் தொடர் போன்ற பிளாக்ஷிப் டேப்லெட்களை விட இதை சற்றே பின்தங்க வைக்கிறது. ஆனால் ஒன்பிளஸ் தனது பிளாக்ஷிப் டேப்லெட்டை, மற்ற நிறுவனங்களை விட ஏறக்குறைய பாதிக்கு பாதி விலையில் வழங்குகிறது. ஆக எப்படி பார்த்தாலும் இது ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு சாதகமான விஷயம் தான்.
ஒன்பிளஸ் பேட் 4 விலை: இது முந்தைய மாடலை போலவே, மிகவும் நியாயமான விலையில் பிரீமியம் அம்சங்களையும், பிரீமியம் அனுபவத்தையும் வழங்கும் உத்தியை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இது ரூ.54,999 - ரூ.59,990 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications