Home
Tablets

மே.5 க்கு அப்புறம் இதுதான்.. 13380mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. 8 ஸ்பீக்கர்கள்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் பேட் 4 (OnePlus Pad 4) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் டேப்லெட் மாடலாக இருக்கிறது. ஏனென்றால், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் சிப்செட்டுடன் களமிறங்கி இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் பேட் 4 மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் பேட் 3 மாடலை விட ரூ.12,000 கூடுதல் விலைக்கு இந்த ஒன்பிளஸ் பேட் 4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால், சிப்செட் மற்றும் பேட்டரி கேபாசிட்டியில் அப்கிரேட் இருக்கிறது. ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒன்பிளஸ் பேட் 3 மாடலில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்தது. ஆனால், இதில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே கிடைக்கிறது.

மே.5 க்கு அப்புறம் இதுதான்.. 13380mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. மாடல்?

மற்ற பீச்சர்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஒன்பிளஸ் ஸ்டைலோ ப்ரோ (OnePlus Stylo Pro) மற்றும் ஸ்மார்ட் கீபோர்ட் (Smart Keyboard) உள்ளிட்ட சப்போர்ட் கொண்டிருக்கிறது. அறிமுக சலுகையில் ஒன்பிளஸ் ஸ்டைலோ ப்ரோ இலவசமாக கிடைக்கிறது. முதலில் பீச்சர்களை பார்த்துவிட்டு விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் பேட் 4 அம்சங்கள் (OnePlus Pad 4 Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ஒன்பிளஸ் பேட் 4 மாடல் கொடுக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 13.2 இன்ச் (3392 x 2400 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவில் 3.4K ரெசொலூஷன், 315 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1000 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னல் கிடைக்கிறது. மேலும், 540Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுத்து, கேமிங் பிரியர்களையும் தட்டித் தூக்கி இருக்கிறது. ஓடிடி பிரியர்களுக்கு பிரீமியம அவுட்புட் கொடுக்கும்படி டால்பி விஷன் (Dolby Vision) இந்த ஒன்பிளஸ் பேட் 3 மாடலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

மே.5 க்கு அப்புறம் இதுதான்.. 13380mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. மாடல்?

ஆக்ஸிஜன்ஓஎஸ் 16.0 ( OxygenOS 16.0) கிடைக்கிறது. ஆகவே, ஏஐ ரைட்டர், ஏஐ சம்மபி, ஏஐ டிரான்ஸ்லேட் மற்றும் ஏஐ பெயிண்டர் உள்ளிட்ட பீச்சர்களுடன் ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) கொடுக்கப்பட்டு உள்ளது. லேப்டாப்புக்கு நிகரான அவுட்புட் கொடுக்கும்படி ஸ்மார்ட் கீபோர்ட் (Smart Keyboard) சப்போர்ட் கிடைக்கிறது. ஒன்பிளஸ் ஸ்டைலோ ப்ரோ சப்போர்ட் வருகிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் பேட் 4 இருக்கிறது. 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கேமராவை கொடுத்துள்ளது. டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஆடியோவிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. 8 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 மைக்ரோபோன்களை இந்த ஒன்பிளஸ் பேட் 4 கொடுத்துள்ளது. ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் உள்ளது.

67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 13380mAh பேட்டரி கிடைக்கிறது. 5.94 எம்எம் தடிமன் மற்றும் 672 கிராம் எடை கொடுத்துள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.64,999ஆகவும் இருக்கிறது. ஒன்பிளஸ், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் கிடைக்க இருக்கிறது.

மே 5ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அறிமுக சலுகையாக ரூ.5,499 மதிப்புள்ள ஸ்டைலோ ப்ரோ கிடைக்கிறது. இது லிமிடெட் பிரீயட் சலுகையாக இருக்கிறது. மேலும், ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட், 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ கிடைக்கிறது. டூன் க்ளோவ் (Dune Glow) கலரிலும், சேஜ் மிஸ்ட் (Sage Mist) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Pad 4 With 13380mAh Battery Launched in India Sale From May 5 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X