Home
Tablets

போட்டான் பாரு.. களமிறங்கும் OnePlus பேட் 3 ப்ரோ.. 12GB ரேம்.. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5.. எப்போது வரும்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. ஆனால், அது ஒன்பிளஸ் பேட் 3 ப்ரோ (OnePlus Pad 3 Pro) மாடலா அல்லது ஒன்பிளஸ் பேட் 4 (OnePlus Pad 4) மாடலா என்பது சரியாக தெரியாமல் இருந்தது. இப்போது, கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட்டின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2), ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) ஆகிய மாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. இதில் ஒன்பிளஸ் பேட் 3 மாடலானது, கடந்தாண்டு ஜூன் மாதத்தில் சீனாவிலும், செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலும் வெளியாகியது. ஆகவே, அடுத்து ஒன்பிளஸ் பேட் 4 மாடலின் வெளியீடு வருகிற ஜூன் மாதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

போட்டான் பாரு.. களமிறங்கும் OnePlus பேட் 3 ப்ரோ.. 12GB ரேம்!

சீனாவில் முதலில் வெளியாகும், பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் களமிறங்கும் என்றும் மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இப்போது எதிர்பார்த்ததை விட முன்னதாகவே புதிய டேப்லெட்டை ஒன்பிளஸ் நிறுவனம் களமிறக்க இருக்கிறது. இந்தியாவில் போஸ்டர் வழியாக புதிய டேப்லெட் விரைவில் அறிமுகமாக இருப்பதை உறுதி செய்தது.

அதே நேரத்தில், அது ஒன்பிளஸ் பேட் 4 மாடலாக இருக்காது, ஒன்பிளஸ் பேட் 3 ப்ரோ மாடலாக இருக்கும் என்றும் மார்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டன. இதை உறுதி செய்யும் விதமாக டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Abhishek Yadav) அவரது எக்ஸ் தளத்தில் ஒன்பிளஸ் பேட் 3 ப்ரோ மாடலே குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிப்செட், ஓஎஸ் மற்றும் ஜிபியு விவரங்களையும் பதிவிட்டுள்ளார். கீக்பெஞ்ச் வழியாக இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. ஆகவே, ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட டேப்லெட் மாடலாகவும் இந்த ஒன்பிளஸ் பேட் 3 ப்ரோ இருக்கப் போகிறது. சிப்செட் அப்படி கொடுக்கப்பட இருக்கிறது.

ஒன்பிளஸ் பேட் 3 ப்ரோ அம்சங்கள் (OnePlus Pad 3 Pro Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கொடுக்கப்பட உள்ளது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிடைக்க இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் கொண்ட மாடலாகவும் இந்த ஒன்பிளஸ் பேட் 3 ப்ரோ டேப்லெட் இருக்கப்போகிறது.

இந்த பீச்சர்கள் தவிர மற்ற பீச்சர்கள் கசியவில்லை. முன்னதாக இந்தியாவில் வெளியான ஒன்பிளஸ் பேட் 3 டேப்லெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.47,999 ஆக இருந்தது. ஆகவே, ஒன்பிளஸ் பேட் 3 ப்ரோ மாடலின் விலை ரூ.50,000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. இதிலும் 12 ஜிபி + 256 ஜிபி கிடைக்கலாம்.

அதேபோல ஒன்பிளஸ் பேட் 3 டேப்லெட்டில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிடைக்கிறது. 13.2 இன்ச் (3392 x 2400 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் 3.4K ரெசொலூஷன் கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 540Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோவுடன் 8 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. 12140mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 5.97 எம்எம் தடிமன் மற்றும் 675 கிராம் எடை கொடுத்து உள்ளது. இதில் சில பீச்சர்கள் அப்கிரேட் செய்யப்பட்டு ப்ரோ மாடலில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad 3 Pro Tipped To Launch With Snapdragon 8 Elite Gen 5 Chip in India Expected Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X