மளமளவென குறைந்த OnePlus டேப்லெட் விலை.. 12140mAh பேட்டரி.. 13MP கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் பேட் 3 மாடலின் விலை தற்போது குறைத்துள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 12140எம்ஏஎச் பேட்டரி, 256ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் மாடலில் உள்ளன. இப்போது ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) மாடலின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசானில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் பேட் 3 மாடலின் முந்தைய விலை ரூ.49,999-ஆக இருந்தது. ஆனால் தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.47,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ரூ.44999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஒன்பிளஸ் பேட் 3 அம்சங்கள் (OnePlus Pad 3 Specifications): 13.2-இன்ச் 3.4கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 × 3392 பிக்சல்ஸ்,144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 540ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. அதுவும் TÜV ரெயிண்லேண்ட் ஐ கேர் 4.0 சான்றிதழ் பெற்றுள்ளது இந்த சாதனம்.
ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் பேட் 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்களை இந்த சாதனத்தில் தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் அட்ரெனோ 830 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) மூலம் இந்த டேப்லெட் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்டெல் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
கூகுள் ஜெமினை (Google Gemini), சர்க்கிள் டூ சேர்ச் (Circle to Search) மற்றும் ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் மாடலில் உள்ளன. எட்டு ஸ்பீக்கர்கள் ஒன்பிளஸ் பேட் 3 மாடலில் உள்ளன. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் சான்றிதழுடன் வருகிறது இந்த சாதனம்.
வெப்ப மேலாண்மைக்கான கிராஃபீன் கம்போசைட் வேப்பர் சேம்பர்களை கொண்டுள்ளது ஒன்பிளஸ் பேட் 3 மாடல். மேலும் இது ஒன்பிளஸ் ஸ்டைலோ 2 (OnePlus Stylo 2) மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் கீபோர்டுடன் இணக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.

12140mAh பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் பேட் 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த சாதனத்தை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலையே இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் பேட் 3 மாடலில் 13எம்பி பிரைமரி கேமரா உள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. ப்ளூடூத் 5.4, வைஃபை 7, யூஸ்எஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் எடை 675 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications








