Home
Tablets

இந்த OnePlus டேப்டெல் மாடலுக்கு இந்தியாவே வெயிட்டிங்.. 12140mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் டீசர் சமீபத்தில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் வெளியாகி உள்ளன. எனவே வரும் வாரங்களில் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த டேப்டெல் மாடலின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3 Specifications): 13.2-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஒன்பிளஸ் பேட் 3 வசதியுடன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 3.4கே ரெசல்யூஷன் (3.4K resolution)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த OnePlus டேப்டெல் மாடலுக்கு  இந்தியாவே வெயிட்டிங்..

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த டேப்லெட் மாடல் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டேப்லெட் மாடலின் எடை 675 கிராம் ஆகும்.

13எம்பி ரியர் கேமரா உடன் ஒன்பிளஸ் பேட் 3 மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.

12140mAh பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் பேட் 3 மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த OnePlus டேப்டெல் மாடலுக்கு  இந்தியாவே வெயிட்டிங்..

புளூடூத் 5.4, என்எப்சி, யுஎஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் ஒன்பிளஸ் பேட் 3 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த சாதனத்தில் 8 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. அதில் 4 வூப்பர்களும், 4 டவீடர்களும் அடங்கும். இதுதவிர 2 மைக்ரோபோன்கள் மற்றும் ப்ளூடூத் ஆடியோ சப்போர்ட் இந்த சாதனத்தில் உள்ளன.

மேலும் ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) சப்போர்ட் உடன் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் அறிமுகமாகும். பின்பு இந்தியாவில் ரூ.50,000-க்கு கீழ் இந்த புதிய ஒன்பிளஸ் பேட் 3 மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட் மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad 3 is set to launch in India soon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X