மிரண்டுபோன மார்க்கெட்.. 9510mAh பேட்டரி.. OLED பேனல்.. வருகிறது புதிய ஒன்பிளஸ் டேப்லெட்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தற்போது டேப்லெட் தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் பேட் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு டேப்லெட் மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அதாவது ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) எனும் டேப்லெட் மாடலை தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
சமீபத்தில் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் ஆனது வரும் வரும் ஜூலை மூன்றாவது வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே ஒன்பிளஸ் நோர்ட் 4 போன் உடன் ஒன்பிளஸ் பேட் 2 மாடலுக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் இந்த டேப்லெட் மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பேட் 2 அம்சங்கள் (OnePlus Pad 2 specifications): 12.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் பேட் 2 இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு ஒஎல்இடி (OLED) பேனல் இந்த டேப்லெட் மாடலில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த டேப்லெட் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மகவும் அருமையாக இருக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் பேட் 2 மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த சாதனத்தில் உள்ளது.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் ( Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) வசதியுடன் ஒன்பிளஸ் பேட் 2 அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட். எனவே இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.
ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஒன்பிளஸ் பேட் 2 சாதனம் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த டேப்லெட் ( tablet) மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

அதேபோல் இந்த ஒன்பிளஸ் பேட் 2 ஆனது 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா உடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த டேப்லெட் மாடல் உதவியுடன் அசத்தலா புகைப்படங்களை எடுக்க முடியும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
குறிப்பாக 9510எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் பேட் 2 ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு ஃபாஸ்ட் சார்ஜிங், கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவரும். அதேபோல் ஒன்பிளஸ் பேட் 2 மாடல் இந்தியாவில் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








