நீங்க வந்தா மட்டும் போதும்.. 12140mAh பேட்டரி.. 512ஜிபி மெமரி.. 67W சார்ஜிங்.. 16ஜிபி ரேம்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்து ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ (OnePlus Pad 2 Pro) எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த டேப்லெட் ஆனது வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் மற்ற ஒன்பிளஸ் டேப்லெட் மாடல்களை விட தனித்துவமான வடிவமைப்புடன் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ மாடலின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ அம்சங்கள் (OnePlus Pad 2 Pro Specifications): 13.2-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ மாடல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஸ்பிளேவில் 3.4கே ரெசல்யூஷன்(3.4K resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே.
பெரிய டிஸ்பிளே உடன் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) உடன் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ அறிமுகமாகும். குறிப்பாாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு அனைத்து ஆப்களையும் இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்தலாம்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி மெமரி + 512ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
13எம்பி ரியர் கேமரா உடன் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
12140mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டீப் சீ ப்ளூ ( Deep Sea Blue) மற்றும் கிளேசியர் சில்வர் ( Glacier Silver) நிறங்களில் இந்த டேப்லெட் வாங்க கிடைக்கும். மேலும் வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








