செல்லமே சீக்கிரம் வந்திடு.. 10000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. புதிய OnePlus டேப்லெட் ரெடி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அடுத்து ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ (OnePlus Pad 2 Pro) எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட் மாடலின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ அம்சங்கள் (OnePlus Pad 2 Pro specifications): 13.2-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ அறிமுகம் செய்யப்பட உள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 3.4கே ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
13எம்பி ரியர் கேமரா உடன் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி வசதியுடன் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த டேப்லெட் மாடலில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதி உள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
10,000mAh பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
குவாட் ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ அறிமுகம் செய்யப்படும். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ மாடல் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.


Click it and Unblock the Notifications








