Home
Tablets

OnePlus போட்ட போடு.. ரூ.3,000 விலை குறைப்பு.. 13 இன்ச் டிஸ்பிளே.. 9510mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையில் (OnePlus Red Rush Days Sale) கிடைக்காத டிஸ்கவுண்ட் விலைக்கு ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மற்றும் ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) மாடல்கள் கிடைக்கின்றன. இப்போது, அமேசானில் ரூ.3,000 விலை குறைப்பு மற்றும் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ஒன்பிளஸ் பேட் 2 கிடைக்கிறது. அதேபோல ஒன்பிளஸ் பேட் கோ மாடலுக்கும் ரூ.3,000 விலை குறைப்பு மற்றும் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் பேட் 2 அம்சங்கள், விலை (OnePlus Pad 2 Specifications Price): இந்த டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 (OxygenOS 14), ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (4nm Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் கிடைக்கிறது. 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

OnePlus போட்ட போடு.. ரூ.3,000 விலை குறைப்பு.. 13 இன்ச் டிஸ்பிளே!

3K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 12.1 இன்ச் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 540Hz டச் சாம்பிளிங் ரேட், 303 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது, இதற்கு ஏற்ப டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது.

இந்த ஒன்பிளஸ் பேட் 2 மாடலில் 6 ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது. 9510mAh பேட்டரி மற்றும் 67W சூப்பர்வூக் சார்ஜிங் உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.39,999ஆக இருந்தது. இப்போது, ரூ.3000 விலை குறைப்பில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. இதுபோக ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ஒன்பிளஸ் பேட் கோ அம்சங்கள், விலை (OnePlus Pad Go Specifications Price): இந்த டேப்லெட்டில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.2 (OxygenOS 13.2), ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS), மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் கிடைக்கிறது. எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 8 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது

8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 2.4K ரெசொலூஷன் கொண்ட 11.3 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட 6 ஸ்பீக்கர்களை கொடுக்கிறது. 8000mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜிங் கிடைக்கிறது.

இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. இப்போது, ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையை முன்னிட்டு ரூ.3000 விலை குறைப்பு மற்றும் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,999 பட்ஜெட்டில் இப்போது அமேசான் தளத்தில் வாங்கலாம்.

இந்த ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையானது, மார்ச் 4ஆம் தேதி தொடங்கிவிட்டது. வரும் மார்ச் 9ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த சலுகைகளை கொடுக்கிறது. ஆகவே, ஒன்பிளஸ் மொபைல், ஒன்பிளஸ் டேப்லெட் மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் வாங்க திட்டமிட்டிருக்கும் கஸ்டமர்கள் இந்த விற்பனையை பயன்படுத்தி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad 2 OnePlus Pad Go Gets Discount on OnePlus Red Rush Days Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X