Home
Tablets

இதெல்லாம் வேற லெவல்.. 67W சார்ஜிங்.. 3K டிஸ்பிளே.. இந்தியாவில் புது OnePlus டேப்லெட் அறிமுகம்.. என்ன விலை?

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மாடல் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் 3கே டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் பேட் 2 மாடல் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் பேட் 2 அம்சங்கள் (OnePlus Pad 2 specifications):12.1-இன்ச் 3கே ஐபிஎஸ் எல்சிடி (3K IPS LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் பேட் 2 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 3000 x 2120 பிக்சல்ஸ், 900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், 540 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

இந்தியாவில் புது OnePlus டேப்லெட் அறிமுகம்.. என்ன விலை?

8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த ஒன்பிளஸ் பேட் 2 மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த சாதனத்தில் உள்ளது.

8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த ஒன்பிளஸ் பேட் 2 மாடல். ஏஐ டூல் பாக்ஸ், ரெக்கார்டிங் சம்மரி, ஏஐ எரேசர் 2.0, ஓபன் கேன்வாஸ்,ஸ்மார்ட் கட்அவுட் 2.0 உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) வசதியுடன் ஒன்பிளஸ் பேட் 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.

ஆக்ஸிஜன் ஓஎஸ் 14(OxygenOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் பேட் 2 மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட்மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ் (Hi-Res Audio certification) மற்றும் 6 ஸ்பீக்கர்கள் உடன் இந்த புதிய பேடலெட் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த ஒன்பிளஸ் பேட் 2 ஆனது 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா உடன் வெளிவந்துள்ளது.எனவே இந்த டேப்லெட் மாடல் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

9510எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் பேட் 2 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W சூப்பர்வூக் (SuperVOOC)ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது.

இந்தியாவில் புது OnePlus டேப்லெட் அறிமுகம்.. என்ன விலை?

வைஃபை 7 802.11பிஇ, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி, 5ஜி ஷேரிங், என்எப் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் பேட் 2 மாடலின் விலை ரூ.39,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.42,999-ஆக உள்ளது.

பிளிப்கார்ட், அமேசான், ஒன்பிளஸ் ஸ்டோர் போன்ற தளங்களில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி விற்பனைக்கு வருகிறது இந்த புதிய ஒன்பிளஸ் பேட் 2 மாடல். இந்த புதிய சாதனத்திற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad 2 Launched in India: check specifications, price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X