Home
Tablets

அதிரவிடும் விலை.. 67W சார்ஜிங்.. 256GB மெமரி.. 13MP கேமரா.. வருகிறது ஒன்பிளஸ் டேப்லெட்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி (நாளை) ஒன்பிளஸ் நோர்ட் 4, ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர், ஒன்பிளஸ் பட்ஸ் 3 ப்ரோ, ஒன்பிளஸ் பேட் 2 ஆகிய சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே அதன் விலை குறித்த தகவல்களை வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பேட் 2 அம்சங்கள் (OnePlus Pad 2 specifications): 12.1-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் பேட் 2 இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு 3000 x 2120 பிக்சல்ஸ், 900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,3 டால்பி விஷன் ( Dolby Vision) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட்.

அதிரவிடும் விலை.. வருகிறது ஒன்பிளஸ் டேப்லெட்.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த ஒன்பிளஸ் பேட் 2 மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த சாதனத்தில் உள்ளது.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) வசதியுடன் ஒன்பிளஸ் பேட் 2 அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த இந்த டேப்லெட் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் பேட் 2 சாதனம் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த டேப்லெட்மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

குறிப்பாக இந்த ஒன்பிளஸ் பேட் 2 ஆனது 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா உடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த டேப்லெட் மாடல் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

9510எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் பேட் 2 ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 67 வாட்ஸ்ஃ ஃபாஸ்ட் சார்ஜிங், கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவரும்.

அதேபோல் ஒன்பிளஸ் பேட் 2 ஆனது இந்தியாவில் ரூ.45,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad 2 Indian pricing released online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X