ஆரம்பமே ரூ.2000 ஆஃபர்.. Flipkart-க்கு வந்த OnePlus-ன் முதல் டேப்லெட்.. ஆனா ஒரு சின்ன டிவிஸ்ட்!
கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த க்ளவுட் 11 நிகழ்வில் ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் 11ஆர், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் டிவி 65 க்யூ2 ப்ரோ, ஒன்பிளஸ் கீபோர்ட் 81 ப்ரோவுடன் சேர்ந்து ஒன்பிளஸின் முதல் டேப்லெட்டான ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) அறிமுகமானது அல்லவா?
தற்போது அது பிரபல இகாமர்ஸ் வளைத்தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) காணப்பட்டுள்ளது, அதுவும் ரூ.2,000 என்கிற அறிமுக சலுகையோடு! உடனே ஒன்பிளஸ் பேடின் இந்திய விற்பனை தொடங்கி விட்டது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். உண்மையில் ஒன்பிளஸ் பேடின் இந்திய விற்பனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவே இல்லை!

இருப்பினும் ட்விட்டர் பயனரான ராபினெய்னின் (@ROBINAYN) கூற்றுப்படி, அவர் ஒன்பிளஸ் பேட்-ஐ பிளிப்கார்ட்டில் பார்த்துள்ளார், கூடவே அதன் விலை நிர்ணயம், ஸ்டரோஜ் ஆப்ஷன்கள், கலர் ஆப்ஷன் மற்றும் அறிமுக சலுகைகள் குறித்த விவரங்களையும் பார்த்துள்ளார். இந்த தகவல் ஒன்பிளஸ் பேடின் இந்திய விற்பனை கூடிய விரைவில் தொடங்குமென்று பரிந்துரைக்கிறது.
ராபினெய்ன் வழியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ஒன்பிளஸ் பேட் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்: பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் ஹை எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி. இந்த இரண்டுமே ஹாலோ க்ரீன் என்கிற சிங்கிள் கலர் ஆப்ஷனின் கீழ் மட்டும் விற்பனை செய்யப்படும்.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 8ஜிபி ரேம் ஆப்ஷனானது ரூ.37,999 க்கும், 12ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.39,999 க்கும் வாங்க கிடைக்கும். அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, சில குறிப்பிட்ட வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ஒன்பிளஸ் பேடின் ஆரம்ப விலையை ரூ.35,999 ஆக மாற்றலாம்.
அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட் (OnePlus First Android Tablet) ஆனது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2800 x 2000 ரெசல்யூஷன், 296 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடனான 11.61 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
வடிவமைப்பை பொறுத்தவரை, ஒன்பிளஸ் பேட் ஆனது 88 சதவீத ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ, 2.5டி கர்வ்டு கிளாஸ், 6.54 மிமீ மெல்லியதாகவும், 552 கிராம் எடையுடனும் உள்ளது. இந்த டேப்லெட் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி (MediaTek Dimensity 9000 SoC) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் சிங்கிள் 13 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும் இது 67W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 9,510mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 60 நிமிடங்களில் 1% முதல் 90% வரை சார்ஜ் ஆகிவிடும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு 13 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) ஓஎஸ், டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ், குவாட்-ஸ்பீக்கர் செட்டப், செல்லுலார் கனெக்ஷனை வழங்கவில்லை என்றாலும் கூட, ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படும்போது 5ஜி ஹாட்ஸ்பாட் மோட்டிற்கான போன்றவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








