OnePlus வெச்சான் பாரு.. முழுசா ரூ.5,250 ஆஃபரில் புது டேப்லெட்.. செப்.22ஆம் முதல் சேல்.. எந்தெந்த டேப்லெட்கள்?
ஒன்பிளஸ் இந்தியா நிறுவனத்தின் ஒன்பிளஸ் பெஸ்டிவ் செலிப்ரேஷன் விற்பனை (OnePlus Festive Celebration Sale) செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஒன்பிளஸ் டேப்லெட் மாடல்கள் கிடைக்காத தள்ளுபடி விலையில் கிடைக்க இருக்கின்றன. இதில் ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) டேப்லெட்டுக்கு அதிக தள்ளுபடி கிடைக்கிறது.
இதுபோக ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மற்றும் ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) மாடல்களுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. ஒன்பிளஸ் இந்தியா தளத்தில் இந்த மாடல்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 22ஆம் தேதி முதல் ஆஃபர் விலையில் கிடைக்கும். இந்த டேப்லெட்களின் விலை, ஆஃபர், பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் பேட் 3 விலை (OnePlus Pad 3 Price): இந்த டேப்லெட்டின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.47,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.5,250 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்க இருக்கிறது. ப்ரீ ஸ்டைலஸ் (Free Stylus) கிடைக்கிறது. 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது. ரூ.42,749 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
ஒன்பிளஸ் பேட் 2 விலை (OnePlus Pad 2 Price): இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.36,999ஆக இருக்கிறது. ரூ.3,250 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. நோ-காஸ்ட் ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கி கொள்ள பிளிப்கார்ட் (Flipkart) தளத்தை பயன்படுத்தலாம்.

ஒன்பிளஸ் பேட் கோ விலை (OnePlus Pad Go Price): இந்த கோ டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.2,250 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது.
ஒன்பிளஸ் பேட் 3 அம்சங்கள் (OnePlus Pad 3 Specifications): 13.2 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 3.4K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 900 எச்பிஎம் வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது. 13 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 12140mAh பேட்டரி + 80W சார்ஜிங் உள்ளது.
ஒன்பிளஸ் பேட் 2 அம்சங்கள் (OnePlus Pad 3 Specifications): 12.1 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 3K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. 13 எம்பி மெயின் + 8 எம்பி செல்பீ கிடைக்கிறது. 67W சூப்பர்வூக் சார்ஜிங் + 9510mAh பேட்டரி உள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் சிப்செட், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உள்ளது.
ஒன்பிளஸ் பேட் கோ அம்சங்கள் (OnePlus Pad Go Specifications): 11.3 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 2.4K ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பிரைட்னஸ் கிடைக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் + ஆக்ஸிஜன் ஓஎஎஸ் 13.2 (Oxygen OS 13.2) கிடைக்கிறது. 8000mAh பேட்டரி, 33W சார்ஜிங் கிடைக்கிறது. 8 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








