ஜூலை 23 உறுதி.. 9340mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. வருகிறது புதிய OnePlus டேப்டெல்.. எந்த மாடல்?
ஜூலை 23-ம் தேதி இந்தியாவில் புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். சமீபத்தில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் பேட் லைட் (OnePlus Pad Lite) மாடல் தான் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஒன்பிளஸ் பேட் லைட் மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் பேட் லைட் அம்சங்கள் (OnePlus Pad Lite Specifications): 11-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் பேட் லைட் மாடல். மேலும் இதன் டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே வசதி இந்த டேப்லெட் மாடலில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி100 எஸ்ஒசி(MediaTek Helio G100 SoC) சிப்செட் இந்த ஒன்பிளஸ் பேட் லைட் மாடலில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இந்த ஒன்பிளஸ் பேட் லைட் மாடலில் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்சிஜன் 15.0.1 (OxygenOS 15.0.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்டெல் மாடலின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் ஆனது 5எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. குறிப்பாக ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
9340mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் பேட் லைட் மாடல். எனவே இந்த டேப்லெட் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33று ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புளூடூத் 5.4, வைஃபை, எல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் பேட் லைட் மாடலில் உள்ளன. அனைத்து சிற்பபான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








