Home
Tablets

நம்பமுடியாத குறைந்த விலையில் Nokia T21 டேப்லெட் அறிமுகம்: என்னென்ன அம்சங்கள்?

எச்எம்டி குளேபல் நிறுவனம் புதிய Nokia T21 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டேப்லெட் அட்டகாசமான அம்சங்களுடன் கம்மி விலையில் விற்பனைக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

நோக்கியா டி21 டேப்லெட்

நோக்கியா டி21 டேப்லெட்

தற்போது இந்த நோக்கியா டி21 டேப்லெட் ஆனது ஐரோப்பாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் அனைத்துநாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ

5:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ

நோக்கியா டி21 டேப்லெட் ஆனது 10.4-இன்ச் 2கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2000 x 1200 பிக்சல்ஸ்,60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்டெல் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது புதிய நோக்கியா டி21 டேப்லெட் மாடல். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா டேப்லெட்.

ஃபேஸ்அன்லாக வசதி

ஃபேஸ்அன்லாக வசதி

வைஃபை மற்றும் 4ஜி/எல்டிஇ என இரண்டு வகைகளில் வெளியிடப்பட்டுள்ளது இந்த நோக்கியா டேப்லெட். குறிப்பாக நோக்கியா டி21 டேப்லெட் மாடலில் கைரேகை சென்சார் வசதி இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஃபேஸ்அன்லாக வசதி ஆதரவுடன் இந்த புதிய டேப்லெட்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12

ஆண்ட்ராய்டு 12

நோக்கியா டி21 டேப்லெட் மாடலில் 12nm Unisoc Tiger T610 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு அப்டேட்

அதேபோல் இரண்டு வருடங்களுக்கு இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த சாதனத்தின் மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்களுக்கு உறுதியளித்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

8எம்பி ரியர் கேமரா

8எம்பி ரியர் கேமரா

எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 8எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா டி21 டேப்லெட் மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். பின்பு சார்கோல் கிரே நிறத்தில் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 8200 எம்ஏஎச் பேட்டரி

8200 எம்ஏஎச் பேட்டரி

குறிப்பாக 8200 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா டி21 டேப்லெட் மாடல். மேலும் இதை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

4ஜி எல்டிஇ,வைஃபை 802.11 ஏசி,புளூடூத் 5.0, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா டேப்லெட். அதேபோல் OZO பிளேபேக் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 300 நிட்ஸ் ப்ரைட்னஸ்ஆதரவைக் கொண்டுள்ளது
நோக்கியா டி1 டேப்லெட்.

நோக்கியா டி1 டேப்லெட் விலை

நோக்கியா டி1 டேப்லெட் விலை

மேலும் நோக்கியா டி21 டேப்லெட் மாடலின் ஆரம்ப விலை 129 EUR (இந்திய மதிப்பில் ரூ.10,300) ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia T21 Tablet Launched at Low Price: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X