Home
Tablets

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான நோக்கியா டேப்லெட்.!

நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் வரும் அக்டோபர் 6-ம் தேதி புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான நோக்கியா டேப்லெட்.!

குறிப்பாக புதிய நோக்கியா டேப்லெட் மாடலுக்கான டீசர் நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நோக்கியா டி20 எனும் பெயரில் இந்த புதிய டேப்லெட் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த புதிய நோக்கியா டி20 மாடல் ஆனது மெல்லிய பிரேம், டார்க் பினிஷ் கொண்டிருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய டேப்லெட் மாடல் 10.36-இன்ச் டச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் இந்த புதிய சாதனம் கருப்பு அல்லது நீல
நிறத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நோக்கியா டி20 மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான நோக்கியா டேப்லெட்.!

இதற்குமுன்பு வெளியான தகவலின்படி நோக்கியா டி20 வைபை விலை ரூ.18,600 என்றும், வைபை மற்றும் செல்லுலார் விலை ரூ.20,300-இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய நோக்கியா டேப்லெட் மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். இது மீடியாடெக் சிப்செட் வசதியை விட சிறந்தது என்றுதான் கூறவேண்டும். அதாவது கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மிகவும் அருமையாக பயன்படும். அதேபோல் மற்ற டேப் சாதனங்களை விட நோக்கியாவின் புதிய டேப் தனித்துவமான கேமரா அம்சங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கபபடுகிறது. குறிப்பாக நோக்கியா டி20 மாடல் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது எனறுதான் கூறவேண்டும். மேலும் எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த நோக்கியா சி01 பிளஸ், நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான நோக்கியா டேப்லெட்.!

நோக்கியா சி01 பிளஸ் அம்சங்கள்

டிஸ்பிளே: 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (720x1,440 பிக்சல்கள்)
18:9 என்ற திரைவிகிதம்
மெட்டல் அலாய் சேஸ் கொண்ட பாலிகார்பனேட் பாடி
ரேம்: 2ஜிபி
மெமரி 16ஜிபி
ப்ராசஸர் : UNISOC SC9863A 1.6GHz ஆக்டா கோர் ப்ராசஸர்
ரியர் கேமரா: 5எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
எல்இடி ஃபிளாஷ் ஆதரவு உள்ளது
பேட்டரி: 3000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்)
பேஸ் அன்லாக் அம்சம்
ஜி-சென்சார்
ஆம்பியண்ட் லைட் சென்சார் ஆதரவு
ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆதரவு
எடை: 157 கிராம்

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான நோக்கியா டேப்லெட்.!

நோக்கியா ஜி10 அம்சங்கள்
டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
20:9 என்ற திரைவிகிதம்
ப்ராசஸர்: மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி ப்ராசஸர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
இரண்டு வருட சாப்ட்வேர் அப்டேட் உள்ளது.
ரியர் கேமரா: 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி
எல்இடி பிளாஷ் ஆதரவு
ப்ளூடூத் 5.0
வைஃபை 802.11
3.5 மிமீ ஹெட்ஜாக்
பேட்டரி: 5050 எம்ஏஎச் பேட்டரி
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவு
எடை: 197 கிராம்

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் எச்எம்டி குளோபல் நிறுவனமும் பல்வேறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம்
செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia T20 Tablet May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X