தரமான அம்சங்களுடன் நோக்கியா டி20 டேப்லெட் அறிமுகம்.! வாங்கத்தூண்டும் விலை.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா டி20 டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் முதலில் ஐரோப்பாவிலும், அதன்பின்பு இந்தியாவில் விற்பனைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் மாணவர்களுக்கு
பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதன் கூறவேண்டும்.

நோக்கியா டி20 டேப்லெட் விலை
நோக்கியா டி20 டேப்லெட்டின் வைஃபை ஒன்லி மாடலின் விலை EUR 199 (இந்திய மதிப்பில் ரூ.17,200). அதேபோல் இதன் வைஃபை + 4 ஜி மாடலின்விலை EUR 239 (இந்திய மதிப்பில் ரூ.20,600). இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா டி20 டேப்லெட் அம்சங்கள்
நோக்கியா டி20 டேப்லெட் ஆனது 10.4 இன்ச் 2 கே எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 2,000 X 1,200 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 5:3 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டு இந்த அட்டகாசமான டேப்லெட் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டேப்லெட்டில் டிஸ்பிளேவை சுற்றி மெலிதான பெஸல்கள்உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய நோக்கியா சாதனம் யூனிசாக் டி 610 ப்ராசஸர் மற்றும் மாலி-ஜி 52 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா டி20 டேப்லெட் மாடல்.

நோக்கியா டி20 டேப்லெட் சாதனம் ஆனது 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/25ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். அதாவது 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு
வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நோக்கியா டி20 டேப்லெட் சாதனத்தின் பின்புறம் 8எம்பி கேமரா ஆதரவுடன் ஆட்டோ-ஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் வசதியும் உள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
சாதனம். அதேபோல் தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பு, IP52 மதிப்பீடு போன்ற சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா சாதனம்.

நோக்கியா டி20 டேப்லெட் மாடலில் 8200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், பவர் அம்ப்ளிஃபையர், டூயல் மைக்ரோஃபோன்கள், ஓசோ ஆடியோ மற்றும் பிளேபேக், எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட அசத்தலான அம்சங்களும் இந்த புதிய டேப்லெட் மாடலில் உள்ளது.

அதேபோல் 4ஜி எல்இடி, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா டி20 டேப்லெட் மாடல். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பட்ஜெட்
விலையில் அனைத்து அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது


Click it and Unblock the Notifications