Home
Tablets

பிளிப்கார்ட்: விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா டி20 டேப்லெட்.!

சில வாரங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா டி20 டேப்லெட் மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய டேப்லெட் மாடல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா டி20 டேப்லெட்.!

நோக்கியா டி20 டேப்லெட் ஆனது 10.4 இன்ச் 2 கே எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,000 X 1,200 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 5:3 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த டேப்லெட்டில் டிஸ்பிளேவை சுற்றி மெலிதான பெஸல்கள்உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். நோக்கியா டி20 டேப்லெட்டின் வைஃபை ஒன்லி மாடலின் விலை EUR 199 (இந்திய மதிப்பில் ரூ.17,200) என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா டி20 டேப்லெட் மாடல் யூனிசாக் டி 610 ப்ராசஸர் மற்றும் மாலி-ஜி 52 ஜிபியு ஆதரவைக் கொண்டு வெளிவரும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா டி20 டேப்லெட் மாடல். எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும். பின்பு ஆப் வசதி மற்றும் வீடியோ உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா டி20 டேப்லெட்.!

நோக்கியா டி20 டேப்லெட் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/25ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். அதாவது 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு வசதியும் உள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களின் டேப்லெட் மாடலை விட தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா டி20 டேப்லெட்.

நோக்கியா டி20 டேப்லெட் மாடலின் பின்புறம் ஆட்டோ-ஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவுடன் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். மேலும் தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பு, IP52 மதிப்பீடு போன்ற சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா டி20 டேப்லெட்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா டி20 டேப்லெட்.!

இந்த நோக்கியா டேப்லெட் மாடலில் 8200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்,பவர் அம்ப்ளிஃபையர், டூயல் மைக்ரோஃபோன்கள், ஓசோ ஆடியோ மற்றும் பிளேபேக், எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தில் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா டி20 டேப்லெட்.!

மேலும் நோக்கியா டி20 டேப்லெட் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. அதேபோல் சமீபத்தில் எச்எம்டி குளோபல்நிறுவனம் புதிய நோக்கியா சி30 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி30 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. பின்பு நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1600x720 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக்எஸ்.சி.9863ஏ பிராசஸர், 13எம்பி பிரைமரி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா டி20 டேப்லெட்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia T20 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X