வாரே வா: Nokia T10 டேப்லெட் அறிமுகம்! விலை & முழு விபரம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அருமையான ஸ்மார்ட்போன்,டேப்லெட்,டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

நோக்கியா டி10 (Nokia T10)

நோக்கியா டி10 (Nokia T10)

இந்நிலையில் புதிய நோக்கியா டி10 (Nokia T10) மாடலை அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். குறிப்பாக இந்த டேப்லெட்
தரமான அம்சங்களுடன் நீங்களே ஆச்சரியப்படும் விலையில் வெளிவந்துள்ளது.

Trump Vs Musk: உத்தரவிட்டால் மண்டியிட்டே கெஞ்சிருப்பார்., இப்போ வளர்த்த கடா மார்பில் பாயுது!Trump Vs Musk: உத்தரவிட்டால் மண்டியிட்டே கெஞ்சிருப்பார்., இப்போ வளர்த்த கடா மார்பில் பாயுது!

நோக்கியா டி10 டேப்லெட் அம்சங்கள்

நோக்கியா டி10 டேப்லெட் அம்சங்கள்

முதலில் இந்த நோக்கியா டி10 டேப்லெட் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது நோக்கியா டி10 டேப்லெட் ஆனது 8-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 800 x 1280 பிக்சல்ஸ், 16:10 ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக்
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.

இது ஆரம்பம் தான்., பிரபஞ்சத்தின் ரகசியமும் துல்லியமும்: களமிறங்கிய NASA james Webb தொலைநோக்கி!இது ஆரம்பம் தான்., பிரபஞ்சத்தின் ரகசியமும் துல்லியமும்: களமிறங்கிய NASA james Webb தொலைநோக்கி!

நோக்கியா டி10 டேப்லெட் சிப்செட்

நோக்கியா டி10 டேப்லெட் சிப்செட்

இந்நிறுவனம் கொண்டுவரும் போன்களில் அதிகமாக இடம்பெறுவது Unisoc சிப்செட் தான். அதேபோல் இந்த புதிய டேப்லெட் மாடலில் கூட Unisoc T616 வசதி உள்ளது. குறிப்பாக இதன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் நோக்கியா டி10 ஆனது வைஃபை மற்றும் வைஃபை + 4ஜி எல்டிஇ என இரண்டு வகைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வைஃபை + 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்ட நோக்கியா டி10 மாடலை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

அம்மாடியோவ் 51% தள்ளுபடியா? இப்படி டீல் கிடைக்குனு நினைக்கலையே! புது Samsung போன் வாங்க இதான் பெஸ்ட் நேரம்!அம்மாடியோவ் 51% தள்ளுபடியா? இப்படி டீல் கிடைக்குனு நினைக்கலையே! புது Samsung போன் வாங்க இதான் பெஸ்ட் நேரம்!

இயங்குதளம்?

இயங்குதளம்?

புதிய நோக்கியா டி10 டேப்லெட் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் உள்ளது.

அதேபோல் நோக்கியா டி10 டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 (OS) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இதன் மூலம் ஆப்ஸ்களை இயக்க அருமையாக இருக்கும்.

மேலும் இந்த புதிய டேப்டெல் மாடலுக்கு இரண்டு வருடம் ஓஎஸ் (OS) அப்டேட், மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என்று அந்நிறுவனம்கூறியுள்ளது.

திரும்ப வந்துட்டேனு சொல்லு- 3 நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் விலை Nokia ஸ்மார்ட்போன் அறிமுகம்!திரும்ப வந்துட்டேனு சொல்லு- 3 நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் விலை Nokia ஸ்மார்ட்போன் அறிமுகம்!

கேமரா எப்படி?

கேமரா எப்படி?

பட்ஜெட் விலைக்கு தகுந்த கேமரா தான் இதில் உள்ளது. அதாவது நோக்கியா டி10 டேப்லெட் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பேஸ் அன்லாக் போன்ற அசத்தலான அம்சங்களை வழங்குகிறது இந்த நோக்கியா டேப்லெட்.

Nothing ஓனருக்கு சொந்த அட்ரஸ் கூட இல்லையா? யார் இந்த Carl Pei? ஒரே டி-ஷர்ட் உடன் உலகம் சுற்றும் CEO!Nothing ஓனருக்கு சொந்த அட்ரஸ் கூட இல்லையா? யார் இந்த Carl Pei? ஒரே டி-ஷர்ட் உடன் உலகம் சுற்றும் CEO!

 பேட்டரி வசதி

பேட்டரி வசதி

நோக்கியா டி10 டேப்லெட் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலையே இருக்காது. இந்த புதிய டேப்லெட் 5250 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 10W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Google Pay யூசர்களுக்கு எச்சரிக்கை; Safety முக்கியம்னா Google Pay யூசர்களுக்கு எச்சரிக்கை; Safety முக்கியம்னா "இதை" பண்ணுங்க! இல்லனா?

ஆடியோ வசதி

ஆடியோ வசதி

OZO பிளேபேக் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா டி10 டேப்லெட். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இது தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தன்மை கொண்டது.

என்ன ராசா சொல்ற? Swiggy பேக் உடன் குதிரையில் போன பையன் நீயா? ஸ்விகி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!என்ன ராசா சொல்ற? Swiggy பேக் உடன் குதிரையில் போன பையன் நீயா? ஸ்விகி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!

 கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா டி10 டேப்லெட். பின்பு இந்த புதிய டேப்லெட் மாடலின் எடை 375 கிராம்.

Jio, Airtel, Vi: தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் நன்மை.. OTT கூட இருக்கா? இது தெரியாம போச்சே!Jio, Airtel, Vi: தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் நன்மை.. OTT கூட இருக்கா? இது தெரியாம போச்சே!

 நோக்கியா டி10 டேப்லெட் விலை

நோக்கியா டி10 டேப்லெட் விலை

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா டி10 டேப்லெட் மாடலின் ஆரம்ப விலை $159 (இந்திய மதிப்பில் ரூ.12,150) ஆக உள்ளது. இந்த புதிய டேப்லெட் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nothing ஓனருக்கு சொந்த அட்ரஸ் கூட இல்லையா? யார் இந்த Carl Pei? ஒரே டி-ஷர்ட் உடன் உலகம் சுற்றும் CEO!Nothing ஓனருக்கு சொந்த அட்ரஸ் கூட இல்லையா? யார் இந்த Carl Pei? ஒரே டி-ஷர்ட் உடன் உலகம் சுற்றும் CEO!

நோக்கியா 105 (2022), நோக்கியா 105

நோக்கியா 105 (2022), நோக்கியா 105

நோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு நோக்கியா 105 (2022), நோக்கியா 105 என்ற பீச்சர் போன்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த போன்கள் கம்மி விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றே கூறலாம்.

இதுபோன்ற பீச்சர் போன்கள் மற்றும் பட்ஜெட் விலை டேப்லெட் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.மேலும் இந்நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Nokia T10 Tablet Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X