Home
Tablets

தரமான டேப்லெட் மாடலை வாங்க இதுதான் நல்ல சான்ஸ்: தள்ளுபடியை அறிவித்த Nokia.!

அமேசான் தளத்தில் தற்போது நோக்கியா டி10 டேப்லெட் மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தள்ளுபடி

தள்ளுபடி

அதாவது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா டி10 டேப்லெட் மாடல் முன்பு ரூ.12,499-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் முன்பு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

8-இன்ச் எச்டி டிஸ்பிளே

8-இன்ச் எச்டி டிஸ்பிளே

குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் இந்த நோக்கியா டி10 டேப்லெட் வெளிவந்துள்ளது. இப்போது இதன் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம். நோக்கியா டி10 டேப்லெட் ஆனது 8-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 800 x 1280 பிக்சல்ஸ், 16:10 ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.

ஆண்ட்ராய்டு 12 (OS)

ஆண்ட்ராய்டு 12 (OS)

இந்நிறுவனம் கொண்டுவரும் போன்களில் அதிகமாக இடம்பெறுவது Unisoc சிப்செட் தான். அதேபோல் இந்த டேப்லெட் மாடலில் கூட Unisoc T616 வசதி உள்ளது. குறிப்பாக இதன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் நோக்கியா டி10 டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 (OS) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இதன் மூலம் ஆப்ஸ்களை இயக்க அருமையாக இருக்கும்.

மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட்

மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட்

மேலும் இந்த புதிய டேப்டெல் மாடலுக்கு இரண்டு வருடம் ஓஎஸ் (OS) அப்டேட், மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.குறிப்பாக இந்த சாதனத்தில் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் உள்ளது.

 8எம்பி ரியர் கேமரா

8எம்பி ரியர் கேமரா

பட்ஜெட் விலைக்கு தகுந்த கேமரா தான் இதில் உள்ளது. அதாவது நோக்கியா டி10 டேப்லெட் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பேஸ் அன்லாக் போன்ற அசத்தலான அம்சங்களை வழங்குகிறது இந்த நோக்கியா டேப்லெட்.

10W பாஸ்ட் சார்ஜிங் வசதி

10W பாஸ்ட் சார்ஜிங் வசதி

நோக்கியா டி10 டேப்லெட் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலையே இருக்காது. இந்த புதிய டேப்லெட் 5250 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 10W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்

OZO பிளேபேக் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா டி10 டேப்லெட். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இது தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தன்மை கொண்டது.

கனெக்டிவிட்டி..

கனெக்டிவிட்டி..

புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா டி10 டேப்லெட். பின்பு இந்த டேப்லெட் மாடலின் எடை 375 கிராம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia T10 Android 12 Tablet Gets Price Cut in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X