10,000mAh பேட்டரி வசதியுடன் அறிமுகமான சியோமி பேட் 5 ப்ரோ: வியக்கவைக்கும் விலை.!
சியோமி நிறுவனம் புதிய சியோமி பேட் 5 ப்ரோ எனும் டேப்லெட் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி பேட் 5 ப்ரோ டிஸ்பிளே
புதிய சியோமி பேட் 5 ப்ரோ மாடல் ஆனது 12.4-இன்ச் WQHD+ டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் குழந்தைகள்
படிப்பதற்கு மிகவும் அருமையாக பயன்படும்.
மேலும் TÜV ரெயின்லாந்து சான்று பெற்ற சியோமி பேட் 5 ப்ரோ மாடல் 2,560x1,600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான கேமரா
புதிய சியோமி பேட் 5 ப்ரோ ஆனது 50எம்பி பிரைமரி கேமரா (f/1.8 and PDAF) + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமராஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான டேப்லெட் மாடல்.
டேப்லெட் மாடலில் இதுபோன்ற கேமரா வசதியை எந்த நிறுவனமும் வழங்கியது இல்லை. குறிப்பாக தனித்துவமான கேமரா வசதியுடன்இந்த சியோமி பேட் 5 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் பிராஸசர்
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியோமி பேட் 5 ப்ரோ மாடலில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராஸசர் வசதி உள்ளது.
எனவே இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.
பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான டேப்லெட்
மாடல். அதேபோல் இந்த சியோமி டேப்லெட் டால்பி விஷன் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிறங்கள்
சில்வர், பிளாக் மற்றும் ஃபாரெஸ்ட் கிரீன் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த சியோமி டேப்லெட். அதேபோல் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி
ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சியோமி பேட் 5 ப்ரோ மாடல்.

சூப்பரான பேட்டரி
சியோமி பேட் 5 ப்ரோ மாடல் 10,000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 64W பாஸ்ட்சார்ஜிங் வசதி, ஹைரெஸ் டால்பி அட்மோஸ் வசதி போன்ற பல சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு தெரியுமா?
புதிய சியோமி பேட் 5 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ.35,400) ஆக உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட்மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
அதேபோல் வைபை 6, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி பேட் 5 ப்ரோமாடல்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications