Home
Tablets

தம்பி ஒன்பிளஸ் ஓரம்போங்க... வெயிட்டான டேப்லெட் மாடலை அறிமுகம் செய்து கெத்து காட்டிய Vivo.!

விவோ நிறுவனம் விவோ பேட்-க்கு அடுத்ததாக விவோ பேட் 2 மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய டேப்லெட் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த விவோ பேட் 2 மாடல் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்ட விவோ பேட் 2 எனும் டேப்லெட் மாடல் ஆனது அலுமினியம் பாடி கொண்டுள்ளது. மேலும் இந்த புதிய டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. இப்போது விவோ பேட் 2 மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வெயிட்டான டேப்லெட் மாடலை அறிமுகம் செய்து கெத்து காட்டிய Vivo.!

அதாவது 12.1-இன்ச் 2.8கே எல்சிடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ பேட் 2 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 2800×1968 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

3.05ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் Dimensity 9000 4என்எம் பிராசஸர் உடன் மாலி-ஜி70 10-கோர் ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய விவோ பேட்2 மாடல். எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். மேலும் இதன் பிராசஸர் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ பேட் 2 மாடல் ஆனது OriginOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி/256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த அட்டகாசமான விவோ டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

வெயிட்டான டேப்லெட் மாடலை அறிமுகம் செய்து கெத்து காட்டிய Vivo.!

13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ பேட் 2 மாடல். எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ பேட் 2 மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

10000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த டேப்லெட் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இதுதவிர 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். இதுதவிர யுஎஸ்பி டைப்-சி ஆடியோ மற்றும் குவாட் ஸ்பீக்கர்கள் உடன் இந்த புதிய டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது.

வெயிட்டான டேப்லெட் மாடலை அறிமுகம் செய்து கெத்து காட்டிய Vivo.!

கிரே, பர்பிள், ப்ளூ, போன்ற நிறங்களில் இந்த விவோ பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த டேப்லெட் மாடலின் ஆரம்ப விலை 2399 yuan (இந்திய மதிப்பில் ரூ.28,650) ஆக உள்ளது. சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. தற்போது அந்த டேப்லெட் மாடலுக்கு போட்டியாகத் தான் இந்த புதிய விவோ டேப்லெட் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
new vivo Pad2 has been launched at price of Rs 28,650: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X