இந்த டேப்லெட் 100% ரக்டு பாய்ஸ்களுக்கு தான்.. சாக்லேட் பாய்ஸ்களுக்கு அல்ல!

|

கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் வறுத்தெடுக்கப்படும் "ரக்டு பாய் Vs சாக்லேட் பாய்" என்கிற மீம் கன்டென்ட்டையும், சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஒரு புதிய டேப்லெட்டையும் 'கனெக்ட்' செய்யமால் இருக்கவே முடியாது!

ஏனெனில் சாம்சங் அறிமுகம் செய்துள்ள அந்த New Tablet ஆனது ஒரு Rugged Tablet ஆகும்!

அதென்ன டேப்லெட்? 'ரக்டு' என்று குறிப்பிடும் அளவிற்கு அதில் என்ன சிறப்பம்சம்? என்ன விலை? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

Samsung-இன் அந்த Rugged டேப்லெட்..?

Samsung-இன் அந்த Rugged டேப்லெட்..?

அது சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 4 ப்ரோ 5ஜி (Samsung Galaxy Tab Active 4 Pro 5G) டேப்லெட் ஆகும்.

சாம்சங்கின் "ஆக்டிவ்" சீரீஸின் கீழ் வெளியாகும் டேப்லெட்கள் ஆனது இந்நிறுவனத்தின் ஹை-எண்ட் கேலக்ஸி டேப்லெட்களுடன் ஒப்பிடும்போது சற்றே 'டோன்டு-டவுன்' செய்யப்பட்ட அம்சங்களை பேக் செய்யும் என்பது உங்களில் பலருக்கும் - ஏற்கனவே - தெரிந்து இருக்கலாம்!

நியாயமான விலைக்கு உலகின் முதல் 17.3-inch ஃபோல்டபிள் லேப்டாப் அறிமுகம்!நியாயமான விலைக்கு உலகின் முதல் 17.3-inch ஃபோல்டபிள் லேப்டாப் அறிமுகம்!

அதே சமயம்

அதே சமயம் "ஈடுகட்டும்" அம்சங்களுடன் வரும்!

ஆம்! ஹை-எண்ட் டேப்லெட்களுடன் ஒப்பிடும் போது அம்சங்களில் சில குறைகள் இருந்தாலும் கூட, அந்த குறைகளை ஈடுகட்டும் வண்ணம் ஆக்டிவ் சீரீஸ் டேப்லெட்கள் ஆனது சில வித்தியாசமான அம்சங்களுடன் வரும்.

அப்படியாக கேலக்ஸி டேப் ஆக்டிவ் 4 ப்ரோ டேப்லெட் ஆனது - ரக்டு பாடி (Rugged Body) உடன் வருகிறது!

அதாவது இந்த டேப்லெட் தீவிர நிலைமைகளுக்கு எதிரான MIL-STD-810H Durability உடன் வருகிறது மற்றும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 சான்றிதழையும் பெற்றுள்ளது!

என்ன டிஸ்பிளே? எவ்வளவு ஸ்டோரேஜ்?

என்ன டிஸ்பிளே? எவ்வளவு ஸ்டோரேஜ்?

சாம்சங்கின் இந்த ரக்டு டேப்லெட் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடனான 10.1 இன்ச் அளவிலான 1920×1200 LCD டிஸ்பிளேவுடன் வருகிறது.

கூகுள் பிளே கன்சோல் லிஸ்டிங்கின்படி, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G ப்ராசஸர் மூலம் இயக்கப்படலாம்.

இது 2 வகையான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வெளியாகி உள்ளது: 4GB + 64GB மற்றும் 6GB + 128GB. மைக்ரோ எஸ்டி கார்டை சேர்ப்பதன் வழியாக இதன் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்கலாம்.

சைக்கிள் கேப்ல Jio பார்த்த வேலை! வீடியோவை உற்றுப் பார்த்தால் தெரியும்!சைக்கிள் கேப்ல Jio பார்த்த வேலை! வீடியோவை உற்றுப் பார்த்தால் தெரியும்!

என்ன கேமரா? என்னென்ன கனெக்டிவிட்டி?

என்ன கேமரா? என்னென்ன கனெக்டிவிட்டி?

ஆண்ட்ராய்டு 12.0 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஒன் யுஐ கொண்டு இயங்கும் இந்த Galaxy Tab Active 4 Pro ஆனது 5ஜி, எல்டிஇ, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.2, வைஃபை 6, என்எஃப்சி மற்றும் (வட அமெரிக்காவில் மட்டும்) ஹைப்ரிட் டூயல் சிம் கார்டு ஸ்லாட் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களை வழங்குகிறது.

என்ன பேட்டரி?

என்ன பேட்டரி?

இந்த டேப்லெட்டின் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் ஆனது ஹோம் கீயில் பொருத்தப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது 13-மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் வருகிறது. இது 7600mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 4 ப்ரோ-வின் விலை:

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 4 ப்ரோ-வின் விலை:

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 4 ப்ரோ டேப்லெட்டின் விலையை இதுவரை வெளியிடவில்லை, ஆனால் இந்த டேப்லெட் ஐரோப்பிய சந்தையில் இந்த செப்டம்பர் மாதம் வாங்க கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் வாட்ச் அலெர்ட்! செப்.7 வரை பொறுமை அவசியம்! ஏனென்றால்?ஸ்மார்ட் வாட்ச் அலெர்ட்! செப்.7 வரை பொறுமை அவசியம்! ஏனென்றால்?

இந்திய விற்பனை?

இந்திய விற்பனை?

தற்போது வரையிலாக, சாம்சங் நிறுவனத்தின் புதிய Galaxy Tab Active 4 Pro டேப்லெட் ஆனது ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள சந்தைகளில் மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த டேப்லெட்டின் இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை. அது தொடர்பான தகவல் கிடைத்தால், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்!

Best Mobiles in India

English summary
Samsung New Tablet 2022 Galaxy Tab Active 4 Pro 5G Launched with Rugged Body

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X