10.1-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி டேப்லெட்.!
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்6 சாதனத்தை அறிமுகம் செய்தது. தற்சமயம் சாம்சங் நிறுவனம் 10-இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய டேப்லெட்டை அறிமகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் SM-P610 மற்றும் SM-P615 என இரு மாடல் நம்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் SM-P610மாடல் நம்பர் கொண்ட சாதனம் சாம்சங் கேலக்ஸி நோட் 10.1 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய கேலக்ஸி டேப்லெட் மாடல் பொதுவாக AMOLED 10.1-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 2560 x 1600 பிக்சல்
திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எஸ் பென் சாதனத்தை ஸ்கிரீன் அருகே கொண்டு சென்று எஸ் பென் பட்டனை க்ளிக் செய்தால் ஏர் கமாண்ட் பேனல் திறக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு பகுதியை ஸ்மார்ட் செலக்ட் செய்து, அதனை மற்றவர்களுடன் பகிர்வது,ஸ்கிரீன்ஷாட் எடுப்பது போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.

புதிய கேலக்ஸி டேப் சாதனம் பொதுவாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு இந்த சாதனத்தில் எஸ் பென் சாதனத்தை ஏதேனும் எழுத்தின் மீது கொண்டு சென்றால், குறிப்பிட்ட வார்த்தையை மொழி பெயர்க்கும் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய கேலக்ஸி டேப் சாதனத்தில் 7040எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதுஇ எனவே அதிகநேரம் வரை மிக அருமையாக பயன்படுத்த முடியும். பின்பு வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications