ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் புதிய ஒப்போ டேப்லெட்.!

|

ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ பேட் எனும் புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் அசத்தலான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ பேட்

ஒப்போ பேட்

ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி, இந்த ஒப்போ பேட் ஆனது 11-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,560x1,600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாவமானடேப்லெட் மாடல் வெளிவரும்.

ஆன்லைனில் உணவு ஆர்டர்.. ரூ. 89,000 வங்கிக் கணக்கில் அபேஸ்.. என்ன நடந்தது தெரியுமா? உஷார் மக்களே.!ஆன்லைனில் உணவு ஆர்டர்.. ரூ. 89,000 வங்கிக் கணக்கில் அபேஸ்.. என்ன நடந்தது தெரியுமா? உஷார் மக்களே.!

 ஒப்போ நிறுவனத்தின் புதிய டேப்லெட்

குறிப்பாக ஒப்போ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலின் பின்புறம் 13எம்பி கேமரா வசதி உள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த ஒப்போ டேப்லெட் மாடல். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு
கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ பேட்.

டாப் லெவல்., சரியான விலை- 108 எம்பி கேமரா, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகமான ஹானர் 60, ஹானர் 60 ப்ரோ!டாப் லெவல்., சரியான விலை- 108 எம்பி கேமரா, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகமான ஹானர் 60, ஹானர் 60 ப்ரோ!

ஒப்போ பேட்

ஒப்போ பேட் எனும் டேப்லெட் மாடலில் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவரும். பின்பு ColorOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். எனவே இந்த சாதனம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..

8080 எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ பேட் ஆனது 8080 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். அதேபோல் இந்த சாதனம் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

5ஜி வசதியுடன் உருவாகும் புதிய ஐபோன் மாடல்.! பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டம்.!5ஜி வசதியுடன் உருவாகும் புதிய ஐபோன் மாடல்.! பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டம்.!

ஒப்போ ஏ95

ஒப்போ ஏ95

ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும்60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் பெரிய டிஸ்பிளே உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இதை நீங்களும் செய்யாதீங்க- அக்டோபரில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்கு தடை!இதை நீங்களும் செய்யாதீங்க- அக்டோபரில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்கு தடை!

ப்போ ஏ95 ஸ்மார்ட்போன் ஆனது

இந்த ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் வசதி மிக வேகமாக செயல்படும் என்றே செயல்படும், குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன்
உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் 'லியோனார்ட்' வால் நட்சத்திரம்.. வெறும் கண்ணிலேயே பார்க்கலாமா?70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் 'லியோனார்ட்' வால் நட்சத்திரம்.. வெறும் கண்ணிலேயே பார்க்கலாமா?

ஒப்போ ஏ95

ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அப்படி என்ன இருக்கு இந்து போன்ல- மீண்டும் விலை உயர்வு பெற்ற ரியல்மி சி11 (2021): வரவேற்பு அமோகமா இருக்கே!அப்படி என்ன இருக்கு இந்து போன்ல- மீண்டும் விலை உயர்வு பெற்ற ரியல்மி சி11 (2021): வரவேற்பு அமோகமா இருக்கே!

ல் 5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33W VOOC Flash Charge பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் மாடல். புளூடூத் வி5.0, 3.5எம்எம் ஹெட்போன் போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

அதேபோல் புதிய ஒப்போ டேப்லெட் ஆனது இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒப்போநிறுவனம் அடுத்த ஆண்டு புதிய தனித்துவமான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
New Oppo Tablet Will be Launched Soon With the Snapdragon Chipset Feature: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X