Home
Tablets

பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் புதிய Lenovo டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்.!

நீண்ட நாட்களுக்குப் பிறகு லெனோவா நிறுவனம் ஒரு அசத்தலான டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது லெனோவா டேப் எம்9 எனும் டேப்லெட் மாடல் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய லேப்டாப் அட்டகாசமான அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளது.

அதாவது லெனோவா டேப் எம்9 மாடல் ஆனது 9-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1340 x 800 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பட்ஜெட் விலையில் புதிய Lenovo டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்.!

புதிய லெனோவா டேப் எம்9 மாடலில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் உடன் ஏஆர்எம் மாலி-5ஜி2 ஜிபியு வசதி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இதில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். பின்பு இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 வசதியைக் கொண்டுள்ளது. ஆனால் கூடிய விரைவில் இதற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் லெனோவா டேப் எம்9 மாடல் ஆனது 3 வருட செக்யூரிட்டி அப்டேட் கொண்டுள்ளது இந்த டேப்லெட். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த டேப்லெட் மாடலின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லெனோவா நிறுவனம். பின்பு டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் இந்த லெனோவா டேப் எம்9 மாடல் வெளிவந்துள்ளது.

3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்ட லெனோவா டேப் எம்9 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்9 மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

8எம்பி ரியர் கேமராவுடன் இந்த லெனோவா டேப் எம்9 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த 8எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி ரியர் கேமரா இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 2எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய டேப்லெட். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5100 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த லெனோவா டேப் எம்9 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது 13 மணி நேரம் வீடியோ பிளேபேக் வழங்கும். பின்பு இதில் 18 மணி நேரம் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறுகிறது. அதேபோல் 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன் இந்த அசத்தலான லெனோவா டேப்லெட் வெளிவந்துள்ளது.

பட்ஜெட் விலையில் புதிய Lenovo டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்.!

4ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அசத்தலான லெனோவா டேப் எம்9 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த லெனோவா டேப்லெட் மாடலின் எடை 344 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ளூ மற்றும் ஸ்டார்ம் கிரே நிறங்களில் இந்த டேப்லெட் கிடைக்கும்.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் வைஃபை ஆதரவு கொண்ட லெனோவா டேப் எம்9 மாடலின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வைஃபை வேரியண்டின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. கடைசியாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் எல்இடி ஆதரவு கொண்ட லெனோவா டேப் எம்9 மாடலின் விலை ரூ.15,499-ஆக உள்ளது. ஜூன் 1-ம் தேதி பிளிப்கார்ட், அமேசான் தளத்தில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Lenovo Tab M9 model launched in India at budget price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X