Lenovo டேப் எம்10 பிளஸ் இந்தியாவில் அறிமுகம்: மாணவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க! என்ன விலை?
லெனோவா நிறுவனம் இந்தியாவில் புதிய லெனோவா டேப் எம்10 பிளஸ் (3rd Gen) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

எல்சிடி டிஸ்பிளே
Lenovo Tab M10 Plus (3rd Gen) மாடல் ஆனது 10.61-இன்ச் 2கே ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,000 x 1,200 பிக்சல்ஸ்,15:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.

லோ ப்ளூ லைட் சான்றிதழ்
TÜV Rheinland லோ ப்ளூ லைட் சான்றிதழுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது இது தீங்கு விளைவிக்கும் நீல ஒளியைக் குறைக்க உதவுகிறது, இதனால் பயனர்கள் அதிக நேரம் திரைப்படங்களைப் பார்த்து மகிழலாம் அல்லது கண்களைக் கஷ்டப்படுத்தாமல் மணிக்கணக்கில் படிக்க முடியும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லெனோவா நிறுவனம்.

ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
லெனோவா டேப் எம்10 பிளஸ் (3rd Gen) மாடல் ஆனது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை
கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் மாடல்.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 பிளஸ் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் Google Kids Space ஆதரவு இருப்பது கூடுதல் சிறப்பு. அதாவது மாணவர்களுக்கு இந்த அம்சம் கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும். இதுதவிர Lenovo Precision Pen 2 ஆதரவு கொண்டு இந்த லெனோவா டேப் எம்10 பிளஸ் (3rd Gen) மாடல் வெளிவந்துள்ளது.

8எம்பி ரியர் கேமரா
டால்பி அட்மாஸ் ஆதரவு, குவாட்-ஸ்பீக்கர் அமைப்பு போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான லெனோவா டேப்லெட். அதேபோல் 8எம்பி ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த லெனோவா மாடல்.

பேட்டரி?
7700 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த லெனோவா டேப் எம்10 பிளஸ்(3rd Gen) சாதனம். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

என்ன விலை?
லெனோவா டேப் எம்10 பிளஸ் (3rd Gen) வைஃபை மாடலின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.
லெனோவா டேப் எம்10 பிளஸ் ((3rd Gen) எல்டிஇ மாடலின் விலை ரூ.21,999-ஆக உள்ளது.
அமேசான் மற்றும் லெனோவா இணையதளங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








