Home
Tablets

6 ஸ்பீக்கர்கள், பெரிய டிஸ்பிளே, 7250mAh பேட்டரி: கம்மி விலையில் அறிமுகமானது பிரபல நிறுவனத்தின் டேப்லெட்.!

ஹானர் நிறுவனம் தனது புதிய டேப்லெட் மாடலை கம்மி விலையில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ (HONOR Pad X8 Pro) எனும் அழைக்கப்படும் டேப்லெட் மாடல் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ மாடல் தற்போது சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டேப்லெட் விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கம்மி விலையில் அறிமுகமானது பிரபல நிறுவனத்தின் டேப்லெட்.!

ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ ஆனது 11.5-இன்ச் 2கே டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெ; மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 685 4ஜி மொபைல் பிளாட்பார்ம் வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு MagicOS 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

குறிப்பாக 5எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ மாடல். ஆனால் 13எம்பி ரியர் கேமராவுடன் இந்த டேப்லெட் வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ மாடல்.

ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ மாடலில் 7250எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 22.5 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ மாடல். எனவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

கம்மி விலையில் அறிமுகமானது பிரபல நிறுவனத்தின் டேப்லெட்.!

ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் 6 ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல். அதேபோல் டூயல் பேண்ட் வைஃபை 5, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ மாடல். பின்பு இந்த சாதனத்தில் எடை 459 கிராம் ஆகும்.

பரப்பிள், ஸ்டார் கிரே, ஸ்கை ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் இந்த ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை 1099 yuan (இந்திய மதிப்பில் ரூ.12,495).

More from GizBot

Best Mobiles in India

English summary
New HONOR Pad X8 Pro has been launched at a price of Rs 12,495: Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X