அறிமுகம் : சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3 & கேலக்ஸி புக்-எஸ் பென்.!

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் சாம்சங் நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளான சாம்சங் கேலக்சி டேப் எஸ்3 மற்றும் கேலக்ஸி புக்-எஸ் பென் ஆகியவற்றினை வெளியிட்டது.

By Ilamparidi
|

நடந்து முடிந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் சாம்சங் நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளான சாம்சங் கேலக்சி டேப் எஸ்3 மற்றும் கேலக்ஸி புக்-எஸ் பென் ஆகியவற்றினை வெளியிட்டது.

பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில்,அத்துணை ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தமது புதிய தயாரிப்புகளை வெளியிட்டன.மேலும்,சில நிறுவனங்கள் தாம் தயாரிக்கவிருக்கும் அடுத்த தயாரிப்புகளினையும் இந்நிகழ்வின் மூலமாக தமது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தின.

பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்த இந்நிகழ்வில் ஸ்மார்ட்போன் போன் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றின் பயனாளர்களின் எதிர்பார்ப்பினை,ஆவலை பூர்த்தி செய்திடும் வகையினில் அத்துணை நிறுவனங்களும் தமது தயாரிப்புகளில் புதிய அம்சங்கள் பலவற்றினை சேர்த்திருந்தன.அந்தவகையில்,சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளான சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3 மற்றும் கேலக்ஸி புக் ஆகியவற்றினை வெளியிட்டுள்ளது.அவற்றின் அம்சங்கள் உள்ளிட்ட தகவல்கள் கீழே.

சாம்சங் கேலக்சி டேப் எஸ்3:

சாம்சங் கேலக்சி டேப் எஸ்3:

எம்டபுள்யூசி மாநாட்டில் சாம்சங் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அதன் புதிய தயாரிப்பாகும்.இந்த டேப்லட் ஆனது அதன் முந்தைய மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்2 வினோடு விட புதிய பல சிறப்பம்சங்களைக்கொண்டும்,பயனாளர்களுக்கு நிறைவான பயன்பாட்டினை வழங்கிடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் எஸ் பென் வழியாக இதனை பயன்படுத்துமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்:

அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ்3 டேப் 9.7 இன்ச் டிஸ்பிளே(2048x1536 பிக்சல்ஸ்),எச்டிஆர் சூப்பர் அமோல்டு டிஸ்பிளே,ஏகேஜி ஸ்பீக்கர்ஸ்,விவிட் கலர்ஸ் அம்சத்துடன் நிறங்களையும் இமேஜ்களையும் தெளிவாகவும் காண இயலும்.மேலும்,ஸ்னாப்ட்ராகன் 820 ப்ரோசஸர்,4ஜிபி ரேம்,32 ஜி பி இன்டெர்னல் ஸ்டோரேஜ்,256 எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ்,13 எம்பி மெயின் கேமரா,5 எம்பி முன்புற கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு நௌவ்கட் உள்ளிட்ட பல அம்சங்களைக்கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்3 டேப்.

எஸ் பென்:

எஸ் பென்:

சாம்சங் கேலக்ஸி எஸ் 3 டேப் யை பயன்படுத்துவதற்காக எஸ் பென் எனும் கருவியையும் வெளியிட்டது.0.7 எம்எம் அளவுள்ள முனை,4096 அளவினுக்கு அழுத்தத்தினுடன் இதனை பயன்படுத்தும் அளவினுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி புக்:

கேலக்ஸி புக்:

சாம்சன் கேலக்ஸி புக் ஆனது இரு அம்சங்களைக்கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.10.6 இன்ச் எல்சிடி டிஸ்பிளே 1920x1280 பிக்செல்ஸ்,இன்டெல் கோர் எம்3 ப்ரோசஸர் 4 ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 128 எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்களைக்கொண்டுள்ளது.

மற்றொரு மாடல் கேலக்ஸி புக்:

மற்றொரு மாடல் கேலக்ஸி புக்:

சாம்சங் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான கேலக்ஸி புக் ஆனது 12 இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே,2160x1440 பிக்செல்ஸ் எச் டி ஆர் வீடியோ இன்டெல் 7 ஜென் ப்ரோசஸர்,4 ஜிபி ரேம்,128 எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.மேலும்,கீ போர்டு கவர் யுஎஸ்பி டைப் சி போர்ட் 10 நேரம் நீடித்து உழைக்கும் பேட்டரி,விண்டோஸ் இங்க் உள்ளிட்ட சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜெயிலில் தரையில் படுத்துறங்கும் சாம்சங் நிறுவன பில்லியனர், ஏன் தெரியுமா.?

Best Mobiles in India

English summary
MWC 2017: Samsung Galaxy Tab S3, Galaxy Book with S Pen launched.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X