Home
Tablets

JBL ஸ்பீக்கர்கள்.. மலிவு விலையில் புதிய டேப்லெட் அறிமுகம் செய்யும் மோட்டோரோலா.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் அசத்தலான மூன்று 5ஜி போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். அதாவது விரைவில் மோட்டோ டேப் ஜி84 எனும் புது டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

Dolby Atmos ஆதரவு கொண்ட ஜேபிஎல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ டேப் ஜி84 மாடல். மேலும் 8எம்பி ரியர் கேமரா, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அசத்தலான மோட்டோ டேப் ஜி84 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலிவு விலையில் புதிய டேப்லெட் மாடலை களமிறக்கும் மோட்டோரோலா..

குறிப்பாக இந்த டேப்லெட் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும். அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் எடை மிகவும் குறைவு என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த டேப்லெட் கம்மி விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டேப்லெட் மாடலின் சில அம்சங்கள் தான் வெளியாகி உள்ளது. விரைவில் இதன் அனைத்து அம்சங்களும் வெளிவரும். மேலும் மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மோட்டோரோலா ஜி84 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் பிஒல்இடி ( 10-bit pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி84 5ஜி போன். மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் ( 1300 nits brightness), 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (360Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சக்திவாய்ந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் அட்ரினோ 691எல் ஜிபியு ஆதரவும் (Adreno 619L GPU)இந்த போனில் உள்ளது.

12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது மோட்டோ ஜி84 5ஜி போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோஃபோன்கள் எனப் பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஐபி54 (IP54) சான்றிதழ் பெற்றுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன்.

30 வாட்ஸ் டர்போ சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். மேலும்ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.

மலிவு விலையில் புதிய டேப்லெட் மாடலை களமிறக்கும் மோட்டோரோலா..

5ஜி (14 5ஜி பேண்ட்ஸ்), டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா ஜி84 5ஜி மாடலை ரூ.19,999-விலையில் வாங்க முடியும்.

அதேபோல் மோட்டோ டேப் ஜி84 மாடலும் இந்தியாவில் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
Moto Tab G84 with JBL speakers will be launched soon: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X