ஜனவரி 18: 11-இன்ச் 2கே எல்சிடி டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் மோட்டோ டேப் ஜி70 சாதனம்.!
மோட்டோரோலா நிறுவனம் வரும் ஜனவரி 18-ம் தேதி புதிய மோட்டோ டேப் ஜி70 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த டேப்லெட் மாடல்.

மோட்டோ டேப் ஜி70
குறிப்பாக இந்த புதிய லேப்லெட் வைஃபை மற்றும் வைஃபை பிளஸ் செல்லுலார் வகைகளில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோ டேப் ஜி70 மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.
மோட்டோ டேப் ஜி70 மாடல் ஆனது 11-இன்ச் 2கே எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2000 x 1200 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த மோட்டோ டேப் ஜி70 மாடல் வெளிவரும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இந்த மோட்டோ டேப் ஜி70 மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி90டி சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான மோட்டோ டேப் ஜி70 மாடல் வெளிவரும்.

இந்த புதிய மோட்டோ டேப்லெட் மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. பின்பு இந்த சாதனம் 7700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும். டால்பி அட்மாஸ், குவாட் ஸ்பீக்கர்கள், Wi-Fi 802.11ac, ப்ளூடூத் 5.1, USB-C போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ டேப் ஜி70 மாடல்
குறிப்பாக மோட்டோ டேப் ஜி70 மாடலின் பின்புறம் 13எம்பி கேமரா உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ டேப் ஜி70 மாடல். மேலும் ஏற்கனவே இந்நிறுவனம் அறிமுகம் செய்த மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
மோட்டோ ஜி71 5ஜி

மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு2400 x 1080 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், உள்ளிட்ட பல்வேறு சிறப்பானஅம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். புதிய மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications