Just In
- 12 hrs ago
பிளிப்கார்ட் எலக்ட்ரானிக் விற்பனை 2022: முக்கிய ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!
- 13 hrs ago
இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!
- 14 hrs ago
அசல் விலையிலிருந்து பாதிக்கு-பாதி தள்ளுபடி.. புது போன் வாங்க இதவிட நல்ல சான்ஸ் கிடைக்காது பாஸ்..
- 15 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன்.!
Don't Miss
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்...
- News
பிளாஸ் டூ தேர்வில் மாறிய வினாத்தாள்.. பரிதவித்த மாணவர்கள்.. ஆசிரியர்கள் மீது அதிரடி நடவடிக்கை
- Movies
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்.. பாராட்டித் தள்ளிய மோகன்லால்.. சூடுபிடித்த ‘விக்ரம்’ புரமோஷன்!
- Automobiles
போலீஸ் திடீர் அதிரடி... ஒரே வாரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... ஏன் தெரியுமா?
- Finance
மொபைல் கேமிங் சந்தை இந்த ஆண்டு இத்தனை பில்லியனை தாண்டுமா?
- Sports
ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிரதமர் பங்கேற்பு.. அகமதாபாத்தில் குவிந்த போலீசார்..அதுவும் எப்படி தெரியுமா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
7700எம்ஏஎச் பேட்டரி, 11-இன்ச் டிஸ்பிளேவுடன் மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!
மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் நிறைய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் டேப்லெட் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளது இந்நிறுவனம். அதாவது தற்போது மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ எனும் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடலின் விலை ரூ.21,999-ஆக உள்ளது.குறிப்பாக இந்த சாதனத்தை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்டுத்திஇந்த லேப்லெட் மாடலை வாங்கினால் 10 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும்.
BSNL: தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு கம்மி விலையில் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..

மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடல் ஆனது 11-இன்ச் 2கே எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2000 x 1200 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 15:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடல் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி90டி சிப்செட் வசதியை கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு இரண்டு கார்டெக்ஸ்-A76 கோர்கள், Mali-G76 GPU ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடல்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடல்.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடலின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும்
என்றே 8எம்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். டால்பி அட்மாஸ் ஆதரவுடன் இயங்கும்குவாட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடல்.

புதிய மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடலில் 7700எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும்பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். வைஃபை 802.11,ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல்
490 கிராம் எடையைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். விரைவில் பல புதிய டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999